நவீனம் கடந்த கவிதைகள் – ஒரு மறுப்பு
றியாஸ் குரானா வின் நவீனம் கடந்த கவிதைகள் என்ற முன்வைப்பே மிகப் பரிதாபகரமானது. நவீனம் எனப் பொதுவாகச் சொல்லப்படுவது கைத்தொழிற்புரட்சியின் பின்னரான காலகட்டம். அதன் பெரும் கொடையாக சனநாயகம், சமத்துவம், பகுத்தறிவு போன்றவற்றைச் சொல்வார்கள். பொதுக்கல்வி, பத்திரிகைகள் வழியாக அது பரவலாக்கப்பட்டது. தமிழ் மனம் தன் பெரும் செய்யுள் மரபிலிருந்து நவீனகாலகட்டத்தினுள் நுழைந்த போது அல்லது நவீன காலகட்ட சிந்தனைகளை சந்தித்த போது, அது செய்யுளின் இறுக்கம் உதறி நவகவிதை /நவீனகவிதையைக் கைக்கொண்டது. அது ஒரு யுகமாற்றம். […]