நூலக மீள் திறப்புத் தடையும் சாதிய அறிதற் கருவிகளும்.
யாழ் நூலக மீள் திறப்புத் தடை விவகாரத்தில் சாதியத்தின் பங்கை மறுக்கும்; சயந்தன், சோமீதரன் மற்றும் விதை குழுமத்தின் புரிதல்களில் எங்கு சிக்கலும் போதாமையும் இருக்கின்றனவென்றால், அவர்கள் அதை நிறுவ முயலும் வழிமுறை மற்றும் ஆதாரங்களில் தான். அவை போதாமை நிறைந்தவை மட்டும் அல்ல மிக அபத்தமானவையும் கூட. எவ்வளவு அபத்தமானவை என்றால் அவர்களது வழிமுறை, ஆதாரத் தொகுப்பு முறையைக் கொண்டு உலகில் இருக்கும் அத்தனை ஒடுக்குமுறைகளையும் நியாயப்படுத்தி விட முடியும்.