தீபச்செல்வன் : அரை உண்மையர்

தீபச்செல்வன் படைப்புக்களை தொடர்ந்தும் கடுமையாக நிராகரித்து வருபவன் நான். அவருடைய எழுத்துக்கள் அரை உண்மைகள். மிகு போலியானவை என்பது என் எண்ணம். அவற்றில் வெற்று ஆவேசக் கூச்சல்களுக்கு அப்பாலான வாழ்க்கை நோக்கோ, சமூகம் குறித்த கரிசனைகளோ வெளிப்படுவதில்லை. அவை மிகை பாவனையும், போலியுமான முன்வைப்புகள் நிறைந்தவை. ஆகவே உடனடிக் கவனிப்புக்கு உள்ளாகின்றன. அவரது எழுத்துக்குப் பல பாவனைகள் இருக்கின்றன. போலியான முகமூடிகள் போல, நுரை தள்ளும் ஆவேசப் பேச்சுக்கள் போல. …

வால்

‘டொப்’ என்ற சத்தம் கேட்டுக் கண் விழித்தபோது எங்கிருக்கிறேன் எனத் தெரியாத நல்ல உறக்கத்திலிருந்தேன். விழித்ததும் கூதல் காற்றே முகத்தில் அறைந்தது. கூடவே பிணம் எரியும் கருகல் வாசனையும் நாசியில் கரித்தது.  மூளை மடிப்புகள் விரிய உடல் அதிர்ந்து குளிர்ந்தது. காலை வெய்யிலில் கண்கள் கூசிச் சுருங்கின. எழுந்து அமர விருப்பமில்லாமல் இரு கைகளையும் கோர்த்துக் கால்களினுள் செருகி தோளைக் குறுக்கி சூட்டைத் தேக்கி உடலைக் கதகதப்பாக்கிப் படுத்திருந்தேன். குடலை …