கட்டுரை

ஆதிக்க சாதிக் கதையாடல்களும், தலித் எதிர் வரலாறுகளும்.

யாழ் சாதிவெறியும், ஆதிக்கசாதி மனநிலையும், புலிகளின் ஆதிக்க சாதிச் சாய்வும் வலிந்து நிறுவ வேண்டிய அபூர்வ நிகழ்வுகள் அல்ல. அவையே யாழ் வாழ்வின் அன்றாடத்துடன் இயல்பாக்கமும், அமைப்பாக்கமும் பெற்றுள்ள மிகப்பெரிய அதிகாரத் தரப்புக்கள். அந்த ஆதிக்கசாதி அதிகாரத் தரப்பு தன்னுடைய வளங்கள், ஊடகங்கள், கலாச்சார மேலாதிக்கம், பொருளாதார மேலாதிக்கங்களைக் கொண்டு உருவாக்கி நம்மிடம் கையளிக்கும் கதையாடல்கள் ஆதிக்க சாதியின் மேலாதிக்க வரலாறுகள் அன்றி வேறு அல்ல. ஆதிக்க சாதித்தரப்பு உருவாக்கி நம்மிடம் கையளித்திருக்கும் வரலாற்றுக்கு, எதிரான வரலாறுகளை […]

நூலக மீள் திறப்புத் தடையும் சாதிய அறிதற் கருவிகளும்.

யாழ் நூலக மீள் திறப்புத் தடை விவகாரத்தில் சாதியத்தின் பங்கை மறுக்கும்; சயந்தன், சோமீதரன் மற்றும் விதை குழுமத்தின் புரிதல்களில் எங்கு சிக்கலும் போதாமையும் இருக்கின்றனவென்றால், அவர்கள் அதை நிறுவ முயலும் வழிமுறை மற்றும் ஆதாரங்களில் தான். அவை போதாமை நிறைந்தவை மட்டும் அல்ல மிக அபத்தமானவையும் கூட. எவ்வளவு அபத்தமானவை என்றால் அவர்களது வழிமுறை, ஆதாரத் தொகுப்பு முறையைக் கொண்டு உலகில் இருக்கும் அத்தனை ஒடுக்குமுறைகளையும் நியாயப்படுத்தி விட முடியும்.

சாதியமும் புலிகளும்

சோமிதரன், சயந்தன் கட்டுரை, காணொலியின் மீது நாம் முன்வைக்கும் கேள்விகள் மிக எளிமையானவை. அவற்றின் நோக்கம், அவசரத் தொனி மற்றும் விடுபடல்கள் குறித்தவை. 17 வருடங்களின் முன்னரான நிகழ்வு ஒன்றினை மறுத்து உரையாட விழையும் போது அதற்கேற்ற முதிர்ச்சியும், பிரச்சனை குறித்த பரந்த பார்வையும் வேண்டியிருக்கிறது. தலித் பிரச்சனை போன்ற சமூகப் பிரச்சனைகளை கையாளும் போது மிகுந்த கவனமும், பொறுப்புணர்வும் வேண்டியிருக்கிறது. இத்தகைய தன்மைகளை எவற்றையும் அந்தக் காணொலியோ,கட்டுரையோ கொண்டிருக்கவில்லை என்பதே அவற்றின் முதலாவது பலவீனம்.

பிரபஞ்ச நூல்

‘பிரபஞ்ச நூல்’ ஷோபாசக்தியின் மிக நல்ல சிறுகதைகளுள் ஒன்று. இவை (மாதா, காயா, பிரபஞ்ச நூல்) இவரின் அடுத்த பட்டாம்பூச்சிக் காலத்தின் கதைகள். ஆரம்பத்தில் எழுதிய வட்டார வழக்கு கதைகளில் இருந்து நகர்ந்த நுட்பமும் பகடியும் கூடிய – அவரே சொல்லிக் கொள்வதுபோல் சற்றே நீளமாக்கப்பட்ட அரசியல் துண்டுப்பிரசுர – காலத்திலும் விபச்சாரியைப்* பற்றித் ‘தமிழ்’ என்று ஒரு கதை எழுதி இருக்கிறார். அது அரசியல் அழுத்தப் பின்னணியுடைய கதை. அக்கதை சொல்லிக்கு ஊரில் ஒரு மழை

நாதனின் நேசமிகு விழிகள்.

காலச்சுவடு ஏப்ரல் 2019-ல் வெளியாகியிருந்த ‘நாதனின் நேசமிகு விழிகள்’ சிறுகதை ( ருவான் எம்.ஜயதுங்க  (சிங்களம்), தமிழில் / எம்.ரிஷான் செரீப்)இது ஒரு மேம்போக்கான கதைதான். பத்திரிகை செய்திகளின் மூலம் எழுதப்பட்ட ஒரு கதையாக கொள்ள இயலும். தினசரிபத்திரிக்கைகளில் வாசிக்கும் சிங்கள மக்களுக்குக்கான கதை. நாதனையும் தகப்பனையும் ஒப்பீடு செய்யும் இடம் ஒரு பொருளாதர அகதிக்கான இடமா? நாதன் அவ்வாறில்லையே…. மற்றபடி 83 கலவரம் காப்பற்றப்பட்டது… லண்டன் காசு, கன்னத்த கடிக்கிறது லண்டனில எல்லா இனங்களும் ஒன்றாக

Scroll to Top