தாக்கம், பாதிப்பு, பின்பற்றுதல், பிரதியெடுத்தல்

  பிரதியெடுத்தல் குறித்து ஒரு வேடிக்கையான கூற்று உண்டு. இலக்கியத்தில் பிரதியெடுத்தல் அனுமதிக்கப்படும்.  ஒரே ஒரு நிபந்தனையின் கீழ். அதாவது பிரதியெடுப்பு மூலத்தைவிட மேலானதாக இருக்க வேண்டும். அப்படி மூலத்திலும் மேம்பட்டதாக வெளிப்பட்டுவிட்டால் பிரதியெடுப்பு ‘கொப்பி’ எனக் கொள்ளப்படாது. அது இன்னொரு மூலப் படைப்பே. அவ்வளவுதான். இந்த வேடிக்கைக் கூற்றில் ஒரு கலை உண்மை இருக்கிறது. இலக்கியமும் சரி கலைகளும் சரி எப்போதும் ஒன்றின் தொடர்ச்சிகளாகவே இன்னொன்று இருக்க முடியும். அது …

சுனில் கிருஷ்ணனின் ‘குருதி வழி’ சரித்திரம் மேல் படியும் செதில் பொருக்கு.

சமகாலப் புனைவெழுத்தாளர்கள் குறித்து கிரிசாந் இப்படிச் சொல்வதுண்டு, ‘இவர்கள் எழுதும் புனைவுகளை விட, புனைவுகளைப் பற்றிச் சொல்லும் கதைகள், விளக்கங்கள் நன்றாகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றன. இவர்கள் புனைவுக்கு வெளியே புனைவுகளைப் பற்றிச் சொல்வதில் ஒரு பத்து சதவீதத்தையாயினும் இவர்களால் புனைவுகளுள் எழுத முடிந்தாலே இவர்களால் சராசரிக்கும் மேலான நல்ல புனைவுகளை எழுதிவிட முடியும்’ சமகால நாவல்களை வாசிக்கும் தோறும் கிரிசாந்தின் இந்தக் ‘கருத்து’ என்னுள் இறுகி வலுவடைந்து வருகிறது. ஒரு …

ஆதிரை : குழி முயலெய்த அம்பு

2025 நவம்பர் தாய்வீடு இதழில் சயந்தனின் ஆதிரை நாவலுக்கு சு.வேணுகோபால் எழுதிய விமர்சனக் கட்டுரை படித்தேன். அதன் தலைப்பு : சிதறடிக்கப்பட்ட ஓர் இனத்தின் துயரக் காவியம் சயந்தனின் ஆதிரை நாவல். கட்டுரைத் தலைப்பைப் பார்த்ததுமே, ஈழப் புனைவுகள் மீதான  தமிழக மூத்தவர்களின் வழமையான மைத்திரேயப் பார்வையே இதுவுமென்ற எண்ணமே உடனே வந்தது. கடந்த காலங்களில் வாசித்த விமர்சனங்களின் தரம் அப்படி. ஈழப் புனைவுகளில் புனைவுச் செறிவையோ, எழுத்தாளரின் தனித்த …

புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும்

சில சமகால ஈழ நாவல்களை முன்வைத்து. சமகால ஈழ நாவல்களை வாசிக்குந்தோறும் அவற்றில் பல அடிப்படைப் போதாமைகளை உணர முடிகிறது. நாவல்கள் என்று நாம் உத்தேசிக்கும் போது அவை மிக விசாலமான பெரும் பரப்பு. அதனுள் பல வர்ண பேதங்களும், அழகியற் தரப்புகளும், வடிவ பேதங்களும் கூட உண்டு. ஆனாலும் அவற்றை எல்லாம் மேவி நாவல் எனும் கலை வடிவம் கோரும் சில அடிப்படைகள் உண்டு. இவை முன் நிபந்தனைகள் …

 நீலகண்டப் பறவையைத் தேடி : மழை வெள்ளத்தின் திசை

நீலகண்டப் பறவையைத் தேடி (நாவல்)அதீன் பந்தோபத்தாயதமிழில் : சு.கிருஸ்ணமூர்த்திவெளியீடு : நசனல் புக் டிரெஷ்ட்அதீன் பந்த்யோபாத்யாய எழுதிய வங்க நாவல். அதன் தமிழ் மொழிபெயர்ப்பை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டிருக்கிறது. தமிழில் மொழி பெயர்த்தவர் சு.கிருஷ்ணமூர்த்தி. 01.நீலகண்டப் பறவையைத் தேடி  தமிழில் வெளியாகிய காலத்திலிருந்தே தனது நுண்மையான சூழல் சித்திரிப்பினாலும், சிதறுண்ட சம்பவ விவரிப்பினாலும் பலராலும் கவனப்படுத்தப்படும் நாவலாக இருக்கிறது. அது தன்னுடைய காலத்தைய நவீனத்துவ நாவல்களிலிருந்து விலகும் புள்ளிகளே …

சிகண்டி : சிகண்டி அம்பையாகுதல்.

01. பெருநகரின் இருளுலகைச் சித்தரிக்கும் படைப்புக்களில் வன்முறையும், குரூரமும் தூக்கலாக இருக்க வேண்டியதொரு நியதி உண்டு. அது இருளுலகைச் சித்தரிப்பதன் போதெழும் சிக்கல்களில் ஒன்று. அந்த இருளுலகு, வன்முறையின் மேல் மனிதக் கீழ்மையின் மேல் பரபரப்பானதாகவும் கூடவே சற்றே நாடகப் பாங்கானதாகவும் இருக்க வேண்டியதாகிறது. அப்படி இல்லாவிடில் இருள் வாழ்வின் குரூரம் படைப்பில் பிரதிபலிக்காதது போன்ற பிரமை எழும். கூடவே இருள் வாழ்க்கைக் களம்  வன்முறையையும் சாகசத்தையும் அவற்றின் விளிம்புகள் …