ஆனைக்கோடாலி (சிறுகதைகள்) : உட்சுருங்கும் புவியியல்
தர்மு பிரசாத்தினுடைய சிறுகதைகள் நிலம் பற்றிய அனுபவத்தினுடைய, அறிவினுடைய அளவு எல்லைகள் குறுக்கப்பட்ட காலத்திலிருந்து வருபவை. மேற்கண்டோருடைய எழுத்தின் நிகழ்காலத்துக்கு அண்மித்த எழுத்தே ஆயினும், ஒரு தலைமுறை கழிந்திருப்பதில் வேறு சில விவரணைகள் சாத்தியமாயிருக்கின்றன. இதுவரையான எழுத்துகளில் கிடைக்ககூடிய பெயரிடப்பட்ட இடங்கள் சார்ந்த இனவரைவியல் (Ethnographic), நிலவரைவியல் (Geographic) சார்ந்த கரிசனைகளைத் தன்னுடைய எழுத்துக்கானதாகப் தர்மு பிரசாத் வரித்துக்கொள்ளவில்லை என்பது மிக முக்கியமான புள்ளியாய்ப் படுகிறது. அதே சமயம், எதார்த்தவாத பணிப்பிலிருந்து விடுபடவேண்டி சுயம் அல்லது அகம் […]