சிறுகதை

நீராழம் – நீலம்

என்னுடைய புதிய சிறுகதை நீராழம் நீலம் இதழில் வெளியாகியிருக்கிறது. /என்னிடம் இருந்தது ஏ.கே47. கூடவே சில 7மி.மி. ரவைகளும். அவையும் மிகச் சொற்பமாகவே எப்போதும் இருப்பில் இருக்கும். எண்ணி எண்ணிச் சுட வேண்டும். சுடும் ஒவ்வொரு குண்டின் நினைவுகளையும் குறித்துவைக்கும் குறிப்புக் கொப்பி வைத்திருந்தேன். ஒரு சூடு சுட்டதும் அந்தக் குண்டின் திசையை தாக்கிய இலக்கைக்  கவனமாகக் குறித்துக் கொள்வேன். கணக்குக் காட்ட அல்ல சொந்த நினைவுகளைப் பேண. ஓய்வான நேரங்களில் – அது அநேகமாகக் காவல் […]

இமிழ் : அரசியல் புலம்பெயரிகளால் பிற சமூகங்களுடன் ஏன் பண்பாட்டு ஊடாட்டம் செய்ய முடிவதில்லை?

சென்னையில் கருப்புப் பிரதிகள் ஏற்பாடு செய்த ‘இமிழ்’ சிறுகதைத் தொகுப்பு மீதான விமர்சனக் கூட்டத்தில் (05.05.2024) ஆய்வாளர் கண்ணன்.எம் அவர்களுடைய விமர்சனங்களைப் பார்த்தேன். கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் என்ன ‘விமர்சன’ முறையோடு இருந்தேனோ அதே நோக்கோடு அட்சரம் பிசகாமல் ஒரு தொகுப்பை விமர்சித்திருக்கிறார். காலப்பயணம் செய்து என்னையே – நான் பார்த்ததுபோல இருந்தது. என்னுடைய நல்லூழ் ஒரு சில  வருடங்களுக்குள்ளேயே என் தேடலின் பாற்பட்டு, குற்றம் கண்டுபிடிக்கும், படைப்புகளில் இல்லாததைத் தேடும் விமர்சன முறையிலிருந்து வெளிவந்து

துண்டு நிலம்

  01. தடுப்பு முகாமிலிருந்து வீட்டிற்கு வந்து சரியாக முப்பது நாட்கள் கழிந்துவிட்டன. துடக்கு நாட்களில் சாமி அறையினுள் புழங்கும் பட படப்புடனே வீட்டினுள்  நடமாட முடிகிறது.  அம்மாவும், அப்பாவும் வேற்று மனிதர்கள் போலவும், இது அயலாரின் வீடுபோலவும், இங்கே நான் வழி தவறி வந்துவிடதாகவும் தோன்றியபடி இருக்கிறது. கண்ணாடிக் குவளையை பட்டுத் துணியால் துடைப்பதுபோல மிக கவனமாக என்னைப் பாவிக்கிறார்கள். உண்மையில் அப்படி இல்லை என்றாலும், அப்பாவிற்கு பதில் செல்லும் போது உள்ளங்கை வியர்த்து, உதடுகள்

சிறுதுளை

01. திருவைத் தேடி வந்திருந்த சின்னவனும், மொறீஸும் களைத்திருந்தனர். அவர்களது மென்நீலக் கட்டம் போட்ட சட்டை வியர்வையூறி வரியாக வெண் உப்பும், சேற்று நிறத்தில் புழுதியும் படிந்திருந்தது. நீண்ட தூரம் நடந்தே வந்திருப்பது சோர்ந்து உற்சாகமிழந்திருக்கும் கண்களில் தெரிந்தது. ஆனால் வீட்டுப் படலைக்கு மேலாகத் திருவைப் பெயர் சொல்லி அழைத்த மொறீஸின் குரல் சோர்வேயில்லாத அதிகாரத்தின் வரண்ட தொனியில் இருந்தது.

ஆனைக்கோடாலி

01. எலுங்கப் பாறை முகட்டில் இருவர் தயங்கி நிற்பது தெரிந்தது. தயக்கம் எதிர்பார்த்தது தான். மழைநீர் அரித்து, வழுக்குப் பாசியோடியிருக்கும் அபாயமான செங்குத்துச் சரிவு குறுக்கிட்டதில் ஏற்பட்ட தயக்கம். இருவரும் பட்ட அசைவுகள் முகில் மடிப்புகளினுள் தெரிந்தாலும், அவர்களுடைய கண்களில் கனலக்கூடிய அச்சத்தை மலையின் கீழ் இருந்தே என்னால் உணர முடிகிறது; கற்பனையில். கால் இடறினால் கீழே ஆழத்தில் ஆற்றின் குறுக்காகக் கட்டப்பட்டிருக்கும் கல் அணையின் மடிப்பில் உடல் கிடைக்கும்; சிவந்த தசைக் கூழாக. எங்கள் முறிக்கு,

Scroll to Top