இமிழ் : கண்ணாடி விரிசல் கதைகள்

இலங்கையிருந்து புலம் பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் – கலைஞர்கள் – இலக்கிய வாசகர்களால் 1988-ஆம் வருடம், ஜெர்மனியின் ‘ஹேர்ண்’ நகரத்தில் தொடங்கப்பட்ட இலக்கியச் சந்திப்பு, இந்த முப்பத்தாறு வருடங்களில் அய்ம்பது சந்திப்புத் தொடர்களை மேற்கு அய்ரோப்பியத் தேசங்களிலும், கனடாவிலும், தாயகத்திலும் நிகழ்த்தி; அதனது 51வது சந்திப்பை பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நிகழ்த்துகிறது. இந்த 51வது இலக்கியச் சந்திப்பில் ‘இமிழ்’ சிறுகதை மலரைத் தொகுத்து வெளியிடுவதில் நாங்கள் பெரிதும் உவகையடைகிறோம். மலரில் …

துண்டு நிலம்

01. தடுப்பு முகாமிலிருந்து வீட்டிற்கு வந்து சரியாக முப்பது நாட்கள் கழிந்துவிட்டன. துடக்கு நாட்களில் சாமி அறையினுள் புழங்கும் பட படப்புடனே வீட்டினுள்  நடமாட முடிகிறது.  அம்மாவும், அப்பாவும் வேற்று மனிதர்கள் போலவும், இது அயலாரின் வீடுபோலவும், இங்கே நான் வழி தவறி வந்துவிடதாகவும் தோன்றியபடி இருக்கிறது. கண்ணாடிக் குவளையை பட்டுத் துணியால் துடைப்பதுபோல மிக கவனமாக என்னைப் பாவிக்கிறார்கள். உண்மையில் அப்படி இல்லை என்றாலும், அப்பாவிற்கு பதில் செல்லும் …

நிலாவரை

தங்கராசு, உணவகம் வந்தபோது அது  பூட்டி இருந்தது. நேற்று மதியம் வரை சன சந்தடியில் அல்லாடிய உணவகம் இன்று எவ்விதச் சலனமும் இல்லாமல் இருந்தது. அதன் கண்ணாடிக் கதவில் புதிதாக வெள்ளைத் துண்டில் அறிவித்தல் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அதில் அடுத்த மாதம் கடை மீளத் திறக்கப்படும் என்ற அறிவித்தல் இருந்தது. உணவகத்தைப் பூட்டியதற்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக்கோரி இருந்தார்கள். தங்கராசுவிற்கு அது  பிடித்திருந்தது. அறிவித்தலை மெதுவாகத் தடவிப் பார்த்துத் தலையை …