புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும்

சில சமகால ஈழ நாவல்களை முன்வைத்து. சமகால ஈழ நாவல்களை வாசிக்குந்தோறும் அவற்றில் பல அடிப்படைப் போதாமைகளை உணர முடிகிறது. நாவல்கள் என்று நாம் உத்தேசிக்கும் போது அவை மிக விசாலமான பெரும் பரப்பு. அதனுள் பல வர்ண பேதங்களும், அழகியற் தரப்புகளும், வடிவ பேதங்களும் கூட உண்டு. ஆனாலும் அவற்றை எல்லாம் மேவி நாவல் எனும் கலை வடிவம் கோரும் சில அடிப்படைகள் உண்டு. இவை முன் நிபந்தனைகள் …

அகழ் இதழ் கட்டுரையும், இரு மறுப்பும்

இச்சா நாவல் குறித்த நட்சத்திரன் செவ்விந்தியனின் விமர்சனக் கட்டுரைக்கு, வரிக்கு வரி மறுப்பு எழுத முடியும். ஆனால் அவரை நான் பொருட்படுத்தி வாசிப்பதுமில்லை, உரையாடுவதுமில்லை. வாசித்து அவருக்குப் பதில் எழுதுவதும் வீண் வேலை. அவர் உமா வரதராஜன், சேரன் உட்படப் பலரையும் இப்படியாக அணுகியே பல நீள் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அது அவரின் அறியாமை மட்டும் அல்ல இணையம் கொடுக்கும் கட்டற்ற சுதந்திரத்தின் மறுபக்கமும் கூட. படைப்பைக் கொண்டு படைப்பாளியை …