கட்டுரை

மூர்க்கரொடு முயல்வேனை 2

என்னுடைய எதிர்வினைகளும் கருத்துகளும் ஏன் உரையாடல்களும் கூட மதுரன், சன்சிகன் போன்ற அறியாமையின் மூடர்களுடன் இல்லை. இந்த வசையர்களுடன் உரையாடுவதில் அர்த்தமோ, பிரயோசனமோ இல்லை. ஒரு விடயத்தைக் கிரகிக்க இயலாதவர்களுடன் என்ன உரையாடல் செய்ய முடியும்? கொஞ்சம் வாசிப்பும் எழுத்துப் பரீட்சியமும் இருந்தாலே இவர்களிடம் வெளிப்படும் அறியாமையின் மூர்க்கத்தை அறிந்து கொள்ள முடியும். இவர்களால் சிறு கட்டுரையையோ அதன் மையக் கருத்தையோ வாசித்துக் கிரகித்து தங்கள் எண்ணங்களைத் தொகுத்து முன்வைக்க முடியாது. என்னுடையது மிகச் சிறிய கட்டுரை. […]

மூர்க்கரொடு முயல்வேனை

//  இன்றைய செய்திகளின் தொகுப்பு !  சோபாசக்திக்கு தன்னறம் விருது வழங்கியிருக்கிறது. ஒடுக்கப்படுபவர்களுக்காக ஒலிக்கும் குரல் சோபாவினதாம்.  நண்பர் கிரிசாந்தின் சமீபத்திய பேச்சுக்களில் இந்துத்துவ வாடை அடிப்பதாக அடிக்கடி நண்பர்கள் விசனப்பட்டுக்கொள்கிறார்கள்.  தன்னறம் சிவராஜ் ஒரு கடும் இந்துத்துவா என்பது இலக்கிய நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும். நண்பர் கிரிசாந்தின் புத்தக அச்சாக்க பணிகளை முழுமையாக செய்து கொடுத்தது தன்னறம். சிவராஜ் மற்றும் தன்னறம் ஜெயமோகனின் B team என்பது எழுத்தாள, இலக்கிய வட்டங்களில் பேசுபொருள். ஜெயமோகனை தீவிரமாக

நோவிலும் வாழ்வு உரைகள்

வசிகரனின் நோவிலும் வாழ்வு கவிதைத்தொகுப்பு 03.11.2024  யாழ்ப்பாணம் காலைத்தூது அழகியல் கல்லூரியில் வெளியீடு செய்யப்பட்டது. அதன் தலைமையுரையில் கருணாகரன் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். பலரும் உணர்ந்து கொண்ட விடயம்தான் என்றாலும் திரும்பத் திரும்பச் சுட்ட வேண்டியிருக்கிறது. ஈழத்தில் இலக்கியக் கருத்துகள், விமர்சனங்கள், பார்வைகளை விரிவாக யாரும் முன்வைப்பதில்லை. வாசிக்கும் பலரும் கள்ள மெளனம் சாதிக்கிறார்கள் என்றும், அது கடக்கப்படவேண்டியதொரு நிலை என்றும் சுட்டியிருந்தார். உரையில்  பேஸ்புக்கிலாவது சிறுகுறிப்புகளாக வாசிப்பை முன்வைக்க வேண்டுமெனக் கேட்டிருந்தார். இந்த மெளடீகம் சில

இமிழ் : தொகுப்பும் தவிர்ப்பும்

01. ‘இமிழ்’ சிறுகதைத் தொகுப்பு மீது பல சந்தேகங்களும் ஊகங்களும் ‘விமர்சனங்கள்’ போல முன்வைக்கப்படுகின்றன.  இமிழ் தொகுப்பைத் தற்குறித்தனம் என்று சிலர்  மிகையாக மதிப்பிடுகின்றனர். சிலர் தங்களது ஊகங்கள், கற்பனைகள், தாழ்வுணர்வின் வடிகாலாக உரையாடுகிறார்கள். சிலர் ஷோபாசக்தி, தர்மு பிரசாத்துடைய இலக்கிய அதிகாரச் செயற்பாடாக அதாவது ‘பெரியண்ணர்’ மனநிலையாகவும், கதைத் தெரிவில் கடைப்பிடிக்கப்பட்ட உள்ளக இறுக்கத்தை / வடிகட்டலை சனநாயக மறுப்பாகவும் காண்கிறார்கள். தங்களுக்கு ஒவ்வாதவர்களின் கதைகளையும் சேகரித்துத் தொகுத்ததால் நாம் இருவரும் சேரம் போய்விட்டதாகவும், அங்கீகாரத்திற்குத்

இமிழ் : திருஞானசம்பந்தன் லலிதகோபன் – 2

11.எட்டு கிழவர்கள் : தமயந்தி தமயந்தி அவர்கள் யாழ். மாவட்டத்தின் அனலைதீவினை சேர்ந்தவர். அவரது கதைகளில் நெய்தல் நிலத்தின் சுவடுகளை நிறையவே காணலாம். தீவகமும் அதனோடு இணைந்த நெய்தல் நிலத்தினையும் தனது கதைகளில் புனைவாக்கம் செய்பவர். இதற்கு முன்னர் அவரின் சிறுகதை தொகுதியான “ஏழு கடற்கன்னிகளை” வாசித்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகவே இந்த கதையினையும் காண முடிகிறது. இலம்பங்குடாவும் அதனோடு இணைந்த வலம்புரித்தீவுமே இந்த கதை நிகழும் களங்கள். இலம்பங்குடா புனித மிக்கேல் தேவாலாயத்தின் அருட்துறவியான “சொக்கட்டான் சுவாமிகள்

Scroll to Top