அகழ் இதழ் கட்டுரையும், இரு மறுப்பும்

இச்சா நாவல் குறித்த நட்சத்திரன் செவ்விந்தியனின் விமர்சனக் கட்டுரைக்கு, வரிக்கு வரி மறுப்பு எழுத முடியும். ஆனால் அவரை நான் பொருட்படுத்தி வாசிப்பதுமில்லை, உரையாடுவதுமில்லை. வாசித்து அவருக்குப் பதில் எழுதுவதும் வீண் வேலை. அவர் உமா வரதராஜன், சேரன் உட்படப் பலரையும் இப்படியாக அணுகியே பல நீள் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அது அவரின் அறியாமை மட்டும் அல்ல இணையம் கொடுக்கும் கட்டற்ற சுதந்திரத்தின் மறுபக்கமும் கூட. படைப்பைக் கொண்டு படைப்பாளியை …

எமக்கு நிகழாதவரை எல்லாமும் வேடிக்கைதான்.

அகரமுதல்வனை முன்வைத்து ஈழத்துச் சீரழிவு இலக்கியமும் தமிழக எழுத்தாளார்களின் அசமந்தப் புன்னகையும்.    இக்கட்டுரையில் இலக்கிய/அரசியற் செயற்பாட்டளர்களின் பெயர் நேரடியாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது அவர்களின் இலக்கியச் செயற்பாடு குறித்த என் துணிபு. பொது வெளியில் அவர்களை தகுதிநீக்கம் செய்து கொள்வதற்கான உள்நோக்கம் அற்றது. இலக்கியத்தின் மீதான கருசனையினால் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனைத் தப்பிதலாக எடுத்துக் கொள்வது அவரவரின் வசதிக்குட்பட்டது. இக்கட்டுரை அகரமுதல்வனின் ஒழுக்கம் / அறம் சார்ந்த பிரச்சனைகளில் கவனம் …