தனிமையின் நூறு ஆண்டுகள்
அக்கா சந்திவேம்பில் சாரத்துணியால் கைகள் கட்டப்பட்டிருந்தபடி போராளிகளின் துப்பாக்கியை நெஞ்சிற்கு நேரே எதிர்கொண்டபோது நெடுநாளைக்கு முந்திய மூன்று கோடைகளை நினைத்துக்கொண்டாள். முதற் கோடை; அடித்தோய்ந்த மழையில் நனைந்து, திரி திரியாகப் புகைந்தபடியிருந்த அவ்ரோ விமானத்தின் துலக்கமான வடிவம் அலுமினியத்தின் பளபளப்பில் அக்காவிற்கு நினைவில் வந்தது. அவ்ரோ விமானம் வாழைமரங்களை முறித்து வீழ்த்தி வாழைத் தோட்டத்தின் நடுவில், உடைந்த வெள்ளை முட்டையோடு போல சிதறிக் கிடந்தது. அதனைச் சுற்றி முறிந்திருந்த வாழை மரங்களின் இலைகள் தீயில் கருகியிருந்தன. கறுப்புப் […]