ஆனைக் கோடரி

வாழ்க்கைக்குத் திரும்புதல் – அறிமுக நிகழ்வு

  காலம் என்பது இருளிலிருந்து ஒளிக்கும் ஒளியிலிருந்து இருளுக்குமாய் தாவுகின்ற ஒரு குரங்கு. இந்தக் குரங்கினை கிளைகளிலிருந்து அகற்றிவிட்டால் எஞ்சி நிற்பது மொட்டை வெளிச்சம் இல்லாவிடின் பட்டை இருள். சமயங்களில் நம்மை வலிந்து இருளுக்குள் திணித்து கொள்கையில் அங்கே பரா வெளிச்சங்களாக உங்களைத் துலக்குபவை கவிதைகள் எனலாம். இந்தப் பரா வெளிச்சத்தை யாரோ ஒருவர் ஏவியிருக்கலாம். ஆனால் துலங்கும் அதன் ஒளியில் வாசிக்கப்படுவதாக உங்களின் அகம் அமைந்து விடுகிறது. என்ன இது கவிதை என்பது வாசகன் வாசிப்பதுதானே, […]

ஆனைக்கோடாலி (சிறுகதைகள்) : உட்சுருங்கும் புவியியல்

தர்மு பிரசாத்தினுடைய சிறுகதைகள் நிலம் பற்றிய அனுபவத்தினுடைய, அறிவினுடைய அளவு எல்லைகள் குறுக்கப்பட்ட காலத்திலிருந்து வருபவை. மேற்கண்டோருடைய எழுத்தின் நிகழ்காலத்துக்கு அண்மித்த எழுத்தே ஆயினும், ஒரு தலைமுறை கழிந்திருப்பதில் வேறு சில விவரணைகள் சாத்தியமாயிருக்கின்றன. இதுவரையான எழுத்துகளில் கிடைக்ககூடிய பெயரிடப்பட்ட இடங்கள் சார்ந்த இனவரைவியல் (Ethnographic), நிலவரைவியல் (Geographic)  சார்ந்த கரிசனைகளைத் தன்னுடைய எழுத்துக்கானதாகப் தர்மு பிரசாத் வரித்துக்கொள்ளவில்லை என்பது மிக முக்கியமான புள்ளியாய்ப் படுகிறது. அதே சமயம், எதார்த்தவாத பணிப்பிலிருந்து விடுபடவேண்டி சுயம் அல்லது அகம்

Scroll to Top