ஈழப்போராட்டம்

நடுகல் : இனவாதக் காட்டாற்றின் நீரோட்டத்தால் வழுவழுப்பாக்கப்பட்ட கூழாங்கற்கள்.

நடுகல் (நாவல்) தீபச்செல்வன் டிஸ்கவரி புக் பேலஸ் ஈழத்துப் போர்க்காலப்படைப்புகள் கருணையுடன் கைதூக்கி விடப்படுவதும், அவற்றின் கனதிக்கு மீறிய கவனம் கொடுப்பதும் இலக்கிய மீட்பர்களின் சோலியில்லாத அணுகுமுறையாகிவிட்ட பின்னர் சென்னைப் புத்தகச் சந்தையை போர்க்கால இரவுகளின் அச்சத்துடன் கடக்கும் நல்லூழே வாய்த்திருக்கிறது. நம்பகமான புனைவுக்கான புறச்சூழலோ, நுண்தகவற் செறிவோ, படைப்பு மொழி குறித்த ஓர்மையோ, சொல் முறையில் கவனமோ இல்லாத ஆழமில்லாப் படைப்புகள் எப்போதும் வெளிவருபவை. இது அவை குறித்தான புகார்கள் இல்லை. ஆழமும், உள்விரிவுமற்ற குறைப் […]

தனிமையின் நூறு ஆண்டுகள்

அக்கா சந்திவேம்பில் சாரத்துணியால் கைகள் கட்டப்பட்டிருந்தபடி போராளிகளின் துப்பாக்கியை நெஞ்சிற்கு நேரே எதிர்கொண்டபோது நெடுநாளைக்கு முந்திய மூன்று கோடைகளை நினைத்துக்கொண்டாள். முதற் கோடை; அடித்தோய்ந்த மழையில் நனைந்து, திரி திரியாகப் புகைந்தபடியிருந்த அவ்ரோ விமானத்தின் துலக்கமான வடிவம் அலுமினியத்தின் பளபளப்பில் அக்காவிற்கு நினைவில் வந்தது. அவ்ரோ விமானம் வாழைமரங்களை முறித்து வீழ்த்தி வாழைத் தோட்டத்தின் நடுவில், உடைந்த வெள்ளை முட்டையோடு போல சிதறிக் கிடந்தது. அதனைச் சுற்றி முறிந்திருந்த வாழை மரங்களின் இலைகள் தீயில் கருகியிருந்தன. கறுப்புப்

மிக ரகசிய இயக்கம்

01 ஓம் குரு எனக்கும் உங்களுக்கு வந்த சந்தேகமே வந்தது. அவள் கஞ்சாப்புகையின் கதகதப்பில் கதையைச் சொல்லத் தொடங்கிய கையோடு நானும் அவளை இடைமறித்து இதே கேள்வியைத்தான் கேட்டேன். அவள் அலங்க மலங்க முழித்தாள். இன்னொரு கஞ்சாவைத்துச் சுருட்டிய சிகரெட்டினை  பெட்டியிலிருந்து உருவியெடுத்து அதன் வாசனையை ஆழமாக உள்ளிழுத்தாள். பின்னர் அதனை உள்ளங்கையில் வைத்து நீண்ட விரல்களினால் உருட்டினாள். ’இல்லவே இல்லை ஊரிலை எண்ட அப்பாவின் இயக்கம் மிக இரகசிய இயக்கம்’ என்றபடி எழுந்து சென்று என்

Scroll to Top