ஈழ இலக்கியம்

இமிழ் : தொகுப்பும் தவிர்ப்பும்

01. ‘இமிழ்’ சிறுகதைத் தொகுப்பு மீது பல சந்தேகங்களும் ஊகங்களும் ‘விமர்சனங்கள்’ போல முன்வைக்கப்படுகின்றன.  இமிழ் தொகுப்பைத் தற்குறித்தனம் என்று சிலர்  மிகையாக மதிப்பிடுகின்றனர். சிலர் தங்களது ஊகங்கள், கற்பனைகள், தாழ்வுணர்வின் வடிகாலாக உரையாடுகிறார்கள். சிலர் ஷோபாசக்தி, தர்மு பிரசாத்துடைய இலக்கிய அதிகாரச் செயற்பாடாக அதாவது ‘பெரியண்ணர்’ மனநிலையாகவும், கதைத் தெரிவில் கடைப்பிடிக்கப்பட்ட உள்ளக இறுக்கத்தை / வடிகட்டலை சனநாயக மறுப்பாகவும் காண்கிறார்கள். தங்களுக்கு ஒவ்வாதவர்களின் கதைகளையும் சேகரித்துத் தொகுத்ததால் நாம் இருவரும் சேரம் போய்விட்டதாகவும், அங்கீகாரத்திற்குத் […]

நடுகல் : இனவாதக் காட்டாற்றின் நீரோட்டத்தால் வழுவழுப்பாக்கப்பட்ட கூழாங்கற்கள்.

நடுகல் (நாவல்) தீபச்செல்வன் டிஸ்கவரி புக் பேலஸ் ஈழத்துப் போர்க்காலப்படைப்புகள் கருணையுடன் கைதூக்கி விடப்படுவதும், அவற்றின் கனதிக்கு மீறிய கவனம் கொடுப்பதும் இலக்கிய மீட்பர்களின் சோலியில்லாத அணுகுமுறையாகிவிட்ட பின்னர் சென்னைப் புத்தகச் சந்தையை போர்க்கால இரவுகளின் அச்சத்துடன் கடக்கும் நல்லூழே வாய்த்திருக்கிறது. நம்பகமான புனைவுக்கான புறச்சூழலோ, நுண்தகவற் செறிவோ, படைப்பு மொழி குறித்த ஓர்மையோ, சொல் முறையில் கவனமோ இல்லாத ஆழமில்லாப் படைப்புகள் எப்போதும் வெளிவருபவை. இது அவை குறித்தான புகார்கள் இல்லை. ஆழமும், உள்விரிவுமற்ற குறைப்

எமக்கு நிகழாதவரை எல்லாமும் வேடிக்கைதான்.

அகரமுதல்வனை முன்வைத்து ஈழத்துச் சீரழிவு இலக்கியமும் தமிழக எழுத்தாளார்களின் அசமந்தப் புன்னகையும்.    இக்கட்டுரையில் இலக்கிய/அரசியற் செயற்பாட்டளர்களின் பெயர் நேரடியாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது அவர்களின் இலக்கியச் செயற்பாடு குறித்த என் துணிபு. பொது வெளியில் அவர்களை தகுதிநீக்கம் செய்து கொள்வதற்கான உள்நோக்கம் அற்றது. இலக்கியத்தின் மீதான கருசனையினால் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதனைத் தப்பிதலாக எடுத்துக் கொள்வது அவரவரின் வசதிக்குட்பட்டது. இக்கட்டுரை அகரமுதல்வனின் ஒழுக்கம் / அறம் சார்ந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்தவில்லை. அவர் எழுத்தில் தன்னை என்னவாக

Scroll to Top