செவ்வாத்தை
01. சாயம் உதிர்ந்து வெளிறிய துணியில் பொதிந்து வைத்திருந்த கல், சிவந்த தணல் துண்டு போல கனன்று எரிந்தது. நொடியில், துணியைப் பொசுக்கிவிடுவது போன்ற மூர்க்கமான தணல். துணியைப் பிரித்து கல்லை எங்கள் முன்னால் வைத்த வைரன், அமைதியாகவும் தீர்க்கமாகவும் அப்பாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். அப்பா, ஒரு நொடி தயக்கத்தின் பின் அதைக் கையிலெடுத்து உள்ளங்கையில் வைத்து மேல் கீழாகத் தூக்கிப் பார்த்தார். அது, அவருடைய கையில் ஒட்டாமல் பாதரசத்துளி போல அங்கும் இங்குமாக அலைந்தது. […]