தர்மு பிரசாத்

செவ்வாத்தை

01. சாயம் உதிர்ந்து வெளிறிய துணியில் பொதிந்து வைத்திருந்த கல், சிவந்த தணல் துண்டு போல கனன்று எரிந்தது. நொடியில், துணியைப் பொசுக்கிவிடுவது போன்ற மூர்க்கமான தணல். துணியைப் பிரித்து கல்லை எங்கள் முன்னால் வைத்த வைரன், அமைதியாகவும் தீர்க்கமாகவும் அப்பாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். அப்பா, ஒரு நொடி தயக்கத்தின் பின் அதைக் கையிலெடுத்து உள்ளங்கையில் வைத்து மேல் கீழாகத் தூக்கிப் பார்த்தார். அது, அவருடைய கையில் ஒட்டாமல் பாதரசத்துளி போல அங்கும் இங்குமாக அலைந்தது. […]

வால்

01. ‘டொப்’ என்ற சத்தம் கேட்டுக் கண் விழித்தபோது எங்கிருக்கிறேன் எனத் தெரியாத நல்ல உறக்கத்திலிருந்தேன். விழித்ததும் கூதல் காற்றே முகத்தில் அறைந்தது. கூடவே பிணம் எரியும் கருகல் வாசனையும் நாசியில் கரித்தது.  மூளை மடிப்புகள் விரிய உடல் அதிர்ந்து குளிர்ந்தது. காலை வெய்யிலில் கண்கள் கூசிச் சுருங்கின. எழுந்து அமர விருப்பமில்லாமல் இரு கைகளையும் கோர்த்துக் கால்களினுள் செருகி தோளைக் குறுக்கி சூட்டைத் தேக்கி உடலைக் கதகதப்பாக்கிப் படுத்திருந்தேன். குடலை அறுக்கும் வல்லூறுகளின் அடித் தொண்டை

ஆக்காட்டி 14

ஆக்காட்டி 14வது இதழ் வெளிவந்திருக்கிறது. ஓரிரு வாரங்களில் இலங்கை, மற்றும் பிரான்ஸில் கிடைக்கும். இந்தியாவில் இதழ் வேண்டும் நண்பர்கள் ‘கருப்புபிரதி’ நீலகண்டனைத் தொடர்புகொள்ளலாம். இந்த இதழில் தோழர் சுகனின் விரிவான நேர்காணல் வந்திருக்கிறது. இலங்கைச் சூழலில் தொடர்ந்து தலித்திய உரையாடலைச் செய்துவருபவர் சுகன். இவர் புகலிடச்சூழலில் விரிவாக உரையாடப்பட்ட மூன்று தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கிறார். ‘தமிழர் என்ற கட்டமைப்பே வன்முறை சார்ந்த மேற்சாதியக் கட்டமைப்பு’ எனச் சொல்லும் சுகன் இஸ்லாமியரைப் போலவே தலித்துகளும் பேரம் பேசும் அரசியல் சக்தியாகத்

நஞ்சுண்டகாடு : முரண் உரையாடல்களுக்கான வெளி

நஞ்சுண்டகாடும்  புலம்பெயர்  இலக்கிய  வெளியும் வணக்கம்  நண்பர்களே ! இதுவொரு  வித்தியாசமான  புலம்பெயர்  இலக்கியக்கூட்டம் முரண்களின் தொகையாகப்  பல்வேறு  அரசியல் தெரிவுடையவர்களும் வந்திருக்கிறார்கள். இதுவொரு  இனிய தருணம்.  இதில்  நான் நஞ்சுண்டகாடு  குறித்துப்  பேச அழைக்கப்பட்டிருக்கிறேன்.  நஞ்சுண்டகாடு நாவல்  குறித்துப் பேசமுன்னர் விடுதலைப்போராட்டக்காலங்களிலும்,  அது முள்ளிவாய்க்காலில்  மூளியாகச்சிதைக்கப்பட்ட  பின்னரும்  வந்த நாவல்கள் குறித்துத்    தொகுத்துப் பார்த்துவிடலாம். முள்ளிவாய்க்காலின்  பின்னராக விடுதலைப் போராட்டத்தின் தோல்வி  குறித்தும்,  அதன்  போராட்ட  அவலம், அராஜகப்போக்கு, வன்முறையரசியல்  குறித்தும் சில  நாவல்கள்

Scroll to Top