வசிகரனின் நோவிலும் வாழ்வு அறிமுகமும் வெளியீடும்.
ஆக்காட்டி வெளியீடான வசிகரனின் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டும் அறிமுகமும் நிகழ்வு 03.11.2024 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கலைத்தூது அழகியல் கல்லூரியில் நிகழ்ந்தது. அதன் ஒளிப்படங்கள்.
ஆக்காட்டி வெளியீடான வசிகரனின் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டும் அறிமுகமும் நிகழ்வு 03.11.2024 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கலைத்தூது அழகியல் கல்லூரியில் நிகழ்ந்தது. அதன் ஒளிப்படங்கள்.
நோவிலும் வாழ்வு வசிகரன் கவிதைகள் ஆக்காட்டி வெளியீடு 2024 கற்பாறைகளை மோதி மோதி ஒவ்வொரு அலையும் நுரைந்தழிவது போல் மொழியைக் கவிதைகள் இளக்குகின்றன. வசிகரன் கவிதைகளுக்குள் மோதும் அலைகளின் இடைவிடாத தீவிரம் கற்பாறையில் உப்பெனப் படிகிறது. அவரின் கவியுலகில் உருக்கொள்ளும் உடல்களும் நிலவுருக்களும் ஏற்கனவே ஈழத்தில் புழக்கத்தில் இருக்கும் கவியுலகுகளில் இருந்து பிறிதான ஒரு கரையை நோக்கியிருக்கிறது. அன்றாட வாழ்வின் இருளுலகுகளுக்குள் குத்தி ஏறி இறங்கும் சிறு படகென அவரால் நுழைய முடிகிறது.