விமர்சனம்

 நீலகண்டப் பறவையைத் தேடி : மழை வெள்ளத்தின் திசை

நீலகண்டப் பறவையைத் தேடி – நாவல்அதீன் பந்தோபத்தாயதமிழில் : சு.கிருஸ்ணமூர்த்திவெளியீடு : நசனல் புக் டிரெஷ்ட்அதீன் பந்த்யோபாத்யாய எழுதிய வங்க நாவல். அதன் தமிழ் மொழிபெயர்ப்பை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டிருக்கிறது. தமிழில் மொழி பெயர்த்தவர் சு.கிருஷ்ணமூர்த்தி. 01. நீலகண்டப் பறவையைத் தேடி  தமிழில் வெளியாகிய காலத்திலிருந்தே தனது நுண்மையான சூழல் சித்திரிப்பினாலும், சிதறுண்ட சம்பவ விவரிப்பினாலும் பலராலும் கவனப்படுத்தப்படும் நாவலாக இருக்கிறது. அது தன்னுடைய காலத்தைய நவீனத்துவ நாவல்களிலிருந்து விலகும் புள்ளிகளே அதன் தனித்தன்மையான மர்ம வசீகரத்தின் […]

சிகண்டி : சிகண்டி அம்பையாகுதல்.

01. பெருநகரின் இருளுலகைச் சித்தரிக்கும் படைப்புக்களில் வன்முறையும், குரூரமும் தூக்கலாக இருக்க வேண்டியதொரு நியதி உண்டு. அது இருளுலகைச் சித்தரிப்பதன் போதெழும் சிக்கல்களில் ஒன்று. அந்த இருளுலகு, வன்முறையின் மேல் மனிதக் கீழ்மையின் மேல் பரபரப்பானதாகவும் கூடவே சற்றே நாடகப் பாங்கானதாகவும் இருக்க வேண்டியதாகிறது. அப்படி இல்லாவிடில் இருள் வாழ்வின் குரூரம் படைப்பில் பிரதிபலிக்காதது போன்ற பிரமை எழும். கூடவே இருள் வாழ்க்கைக் களம்  வன்முறையையும் சாகசத்தையும் அவற்றின் விளிம்புகள் வரை நகர்த்தக் கூடியதாக இருக்கின்றது. அவை

அகழ் இதழ் கட்டுரையும், இரு மறுப்பும்

இச்சா நாவல் குறித்த நட்சத்திரன் செவ்விந்தியனின் விமர்சனக் கட்டுரைக்கு, வரிக்கு வரி மறுப்பு எழுத முடியும். ஆனால் அவரை நான் பொருட்படுத்தி வாசிப்பதுமில்லை, உரையாடுவதுமில்லை. வாசித்து அவருக்குப் பதில் எழுதுவதும் வீண் வேலை. அவர் உமா வரதராஜன், சேரன் உட்படப் பலரையும் இப்படியாக அணுகியே பல நீள் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அது அவரின் அறியாமை மட்டும் அல்ல இணையம் கொடுக்கும் கட்டற்ற சுதந்திரத்தின் மறுபக்கமும் கூட. படைப்பைக் கொண்டு படைப்பாளியை மதிப்பிடுவதோ, அவருடைய தனி வாழ்க்கைக் குறிப்புகளைக்

இச்சாவும் சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்களும்…

01. இச்சா அரசியல் சராசரித்தனங்கள் நிறைந்திருக்கும் இலங்கைத் தமிழ்ச் சூழலில், ஷோபாசக்தியின் படைப்புகள்  இன்னும் சரியாக வாசிக்கப்படவில்லை. அவரது படைப்புகளில் அரசியல் கருத்துகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் வாசிப்புகளே நிகழ்ந்திருக்கின்றன. அதனால் அவரது படைப்புகளுக்கான ஆழமான வாசிப்புக் கட்டுரைகள் , விமர்சனங்கள், திறனாய்வுகள் சொற்பமாகவே வாசிக்கக் கிடைக்கின்றன. இருபது வருடங்களாக எழுதிவருபவரும், தன் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளில் ஆழமான செல்வாக்கையும் செலுத்தும் அவருடைய படைப்புலகை அணுக நல்ல வாசிப்புக் கட்டுரைகள் இல்லை என்பது தமிழின் இயல்பான வழமைதான் என்பதால்

பேரழிவின் பிறழ் சாட்சியம் -பார்த்தீனியம்

வரலாற்று நாவல்கள் அன்றாட நிகழ்வுகளை மிகைப்படுத்திய, புனைவுத்தன்மையுடன் தரும் புதினம் அல்ல. அவை உண்மையான வரலாறை மேலும் புரிந்து கொள்வதையே சாத்தியமாக்குகின்றன. உம்பர்தோ எகோ ‘தமிழ்நதியின் பார்த்தீனியம் :  பேரழிவின் மானுட சாட்சியம்’ யமுனா ராஜேந்திரன் ‘சற்றேறக் குறைய ஈழத்தின் எல்லா நாவல்களையும் வாசித்திருக்கிறேன். ஆனால் அதில் எழுதுபவரின் அரசியலையும் சேர்த்தேதான் உள்வாங்கிக் கொள்ள முடிந்திருக்கிறது. வாசகனைப் பொறுத்தமட்டில் சிலசமயம் அவனுக்கொவ்வாத அரசியல் அஜீரணத்தையும் ஏற்படுத்தக்கூடும். பார்த்தீனியத்தில் தமிழ்நதி வைப்பது உள்ளீடாக எந்த அரசியலையும் அல்ல. உள்ளது

Scroll to Top