51 வது இலக்கியச்சந்திப்பு

இமிழ் : தொகுப்பும் தவிர்ப்பும்

01. ‘இமிழ்’ சிறுகதைத் தொகுப்பு மீது பல சந்தேகங்களும் ஊகங்களும் ‘விமர்சனங்கள்’ போல முன்வைக்கப்படுகின்றன.  இமிழ் தொகுப்பைத் தற்குறித்தனம் என்று சிலர்  மிகையாக மதிப்பிடுகின்றனர். சிலர் தங்களது ஊகங்கள், கற்பனைகள், தாழ்வுணர்வின் வடிகாலாக உரையாடுகிறார்கள். சிலர் ஷோபாசக்தி, தர்மு பிரசாத்துடைய இலக்கிய அதிகாரச் செயற்பாடாக அதாவது ‘பெரியண்ணர்’ மனநிலையாகவும், கதைத் தெரிவில் கடைப்பிடிக்கப்பட்ட உள்ளக இறுக்கத்தை / வடிகட்டலை சனநாயக மறுப்பாகவும் காண்கிறார்கள். தங்களுக்கு ஒவ்வாதவர்களின் கதைகளையும் சேகரித்துத் தொகுத்ததால் நாம் இருவரும் சேரம் போய்விட்டதாகவும், அங்கீகாரத்திற்குத் […]

இமிழ் : திருஞானசம்பந்தன் லலிதகோபன் – 2

11.எட்டு கிழவர்கள் : தமயந்தி தமயந்தி அவர்கள் யாழ். மாவட்டத்தின் அனலைதீவினை சேர்ந்தவர். அவரது கதைகளில் நெய்தல் நிலத்தின் சுவடுகளை நிறையவே காணலாம். தீவகமும் அதனோடு இணைந்த நெய்தல் நிலத்தினையும் தனது கதைகளில் புனைவாக்கம் செய்பவர். இதற்கு முன்னர் அவரின் சிறுகதை தொகுதியான “ஏழு கடற்கன்னிகளை” வாசித்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகவே இந்த கதையினையும் காண முடிகிறது. இலம்பங்குடாவும் அதனோடு இணைந்த வலம்புரித்தீவுமே இந்த கதை நிகழும் களங்கள். இலம்பங்குடா புனித மிக்கேல் தேவாலாயத்தின் அருட்துறவியான “சொக்கட்டான் சுவாமிகள்

செவ்வாத்தை

01. சாயம் உதிர்ந்து வெளிறிய துணியில் பொதிந்து வைத்திருந்த கல், சிவந்த தணல் துண்டு போல கனன்று எரிந்தது. நொடியில், துணியைப் பொசுக்கிவிடுவது போன்ற மூர்க்கமான தணல். துணியைப் பிரித்து கல்லை எங்கள் முன்னால் வைத்த வைரன், அமைதியாகவும் தீர்க்கமாகவும் அப்பாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். அப்பா, ஒரு நொடி தயக்கத்தின் பின் அதைக் கையிலெடுத்து உள்ளங்கையில் வைத்து மேல் கீழாகத் தூக்கிப் பார்த்தார். அது, அவருடைய கையில் ஒட்டாமல் பாதரசத்துளி போல அங்கும் இங்குமாக அலைந்தது.

51 வது இலக்கியச் சந்திப்பு – நிகழ்வுநிரல்

51வது இலக்கியச் சந்திப்பு 30-31 மார்ச் 2024 – பாரிஸ் இடம்: 12 Rue de la République, 93350 Le Bourget நிகழ்வு நிரல் சனிக்கிழமை 30.03.2024 09.00 காலை உணவு 09.30 பங்கேற்பாளர்களின் தன்னறிமுகம் 9.45 51வது இலக்கியச் சந்திப்புத் தொடக்கவுரை விஜி 10.00 சிற்றிதழ்கள் அறிமுகம் காலம் :  வாசுதேவன் ஜீவநதி :  மாதவி மறுகா:  அகரன் வளர் :  அசுரா ஒருங்கிணைப்பு  – ச.தில்லைநடேசன் 11.30 ‘இமிழ்’ 51வது இலக்கியச் சந்திப்பு

Scroll to Top