கொடிறோஸ் (குறுநாவல்)
கொடிறோஸ் (குறுநாவல்) ஆக்காட்டியின் மூன்றாவது வெளியீடு. யதார்தனின் மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம் சிறுகதைத் தொகுப்பு, வசிகரனின் நோவிலும் வாழ்வு கவிதைத் தொகுப்பைத் தொடர்ந்து கிரிசாந்தின் இக் குறுநாவல் வெளியாகிறது. முதல் இரண்டு வெளியீடுகளும் குறைவான வாசிப்பே ஈழத்தில் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றிற்கு என்றில்லை அநேகமான ஈழப் படைப்புகளின் நிலையும் அதுதான். காரணம் ஈழ வாசிப்பு பல முன்முடிவுகளுடன் சுமையுடன் இருக்கின்றது. அதனால் தன்னிச்சையான வாசிப்புக் குழுக்களோ அல்லது இலக்கிய …
