பதற்றங்களின் நாயகன்
மஹெல ஜெயவர்தனாவின் மட்டையாட்டத்தில் 2003ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர் முக்கியமானது. அத்தொடரில்அவர் வீழ்ச்சியின் உச்சத்திலிருந்தார். தொடர்ந்துமோசமாக அடித்தாடி ஆட்டமிழந்தார். அவரிடமிருந்த நிதானம் காற்றில் வைத்த கற்பூரம் போல சுவடேயில்லாமல் போயிருந்தது. வெறுமையானவெங்காயப் பெட்டிபோல கடந்தகால வாசம் மட்டுமே வீசினார். பலரும்அவரில் விசனப்படத் தொடங்கிய நேரம். அந்தவிசனங்களின் உச்சமாயிருந்தது, அவுஸ்ரேலியாவுடனானஉலகக் கிண்ண அரையிறுதிப் போட்டி. 172 எனும் இலக்கை, 38.1 பந்துப்பரிமாற்றங்களில் (ஷீஸ்மீக்ஷீs) துரத்திய இலங்கை, வெறும்123ஐ மாத்திரமே அடித்துத் …
