சுனில் கிருஷ்ணனின் ‘குருதி வழி’ சரித்திரம் மேல் படியும் செதில் பொருக்கு.

சமகாலப் புனைவெழுத்தாளர்கள் குறித்து கிரிசாந் இப்படிச் சொல்வதுண்டு, ‘இவர்கள் எழுதும் புனைவுகளை விட, புனைவுகளைப் பற்றிச் சொல்லும் கதைகள், விளக்கங்கள் நன்றாகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றன. இவர்கள் புனைவுக்கு வெளியே புனைவுகளைப் பற்றிச் சொல்வதில் ஒரு பத்து சதவீதத்தையாயினும் இவர்களால் புனைவுகளுள் எழுத முடிந்தாலே இவர்களால் சராசரிக்கும் மேலான நல்ல புனைவுகளை எழுதிவிட முடியும்’ சமகால நாவல்களை வாசிக்கும் தோறும் கிரிசாந்தின் இந்தக் ‘கருத்து’ என்னுள் இறுகி வலுவடைந்து வருகிறது. ஒரு …

தீபச்செல்வன் : அரை உண்மையர்

தீபச்செல்வன் படைப்புக்களை தொடர்ந்தும் கடுமையாக நிராகரித்து வருபவன் நான். அவருடைய எழுத்துக்கள் அரை உண்மைகள். மிகு போலியானவை என்பது என் எண்ணம். அவற்றில் வெற்று ஆவேசக் கூச்சல்களுக்கு அப்பாலான வாழ்க்கை நோக்கோ, சமூகம் குறித்த கரிசனைகளோ வெளிப்படுவதில்லை. அவை மிகை பாவனையும், போலியுமான முன்வைப்புகள் நிறைந்தவை. ஆகவே உடனடிக் கவனிப்புக்கு உள்ளாகின்றன. அவரது எழுத்துக்குப் பல பாவனைகள் இருக்கின்றன. போலியான முகமூடிகள் போல, நுரை தள்ளும் ஆவேசப் பேச்சுக்கள் போல. …

ஆதிரை : குழி முயலெய்த அம்பு

2025 நவம்பர் தாய்வீடு இதழில் சயந்தனின் ஆதிரை நாவலுக்கு சு.வேணுகோபால் எழுதிய விமர்சனக் கட்டுரை படித்தேன். அதன் தலைப்பு : சிதறடிக்கப்பட்ட ஓர் இனத்தின் துயரக் காவியம் சயந்தனின் ஆதிரை நாவல். கட்டுரைத் தலைப்பைப் பார்த்ததுமே, ஈழப் புனைவுகள் மீதான  தமிழக மூத்தவர்களின் வழமையான மைத்திரேயப் பார்வையே இதுவுமென்ற எண்ணமே உடனே வந்தது. கடந்த காலங்களில் வாசித்த விமர்சனங்களின் தரம் அப்படி. ஈழப் புனைவுகளில் புனைவுச் செறிவையோ, எழுத்தாளரின் தனித்த …

செம்மையாக்கம்

ஈழ இலக்கியச் சூழலில் இலக்கியம் தவிர்ந்த, ஒரு  புனைவின் அரசியல் உள்ளடக்கமும், புனைவில் துருத்தும் கருத்துகள் குறித்த உரையாடல்களுமே அதிகம் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாக இருக்கிறது. கூடவே ஈழத்தவர் ஒரு புனைவின் உண்மைத் தன்மை பற்றிய சந்தேகங்களையும், கேள்விகளையும் இடைவிடாது எழுப்பிக் கொண்டே இருப்பார்கள். அதுவே இலக்கியத்தை அளவிட மதிப்பிட இவர்களிடம் இருக்கும் ஒரே ஒரு அளவுகோல். அதுவே மூளைச் சோம்பலர்களின் இலகுவான வழிமுறையும் கூட. ஒரு புனைவில் …

மூர்க்கரொடு முயல்வேனை 2

என்னுடைய எதிர்வினைகளும் கருத்துகளும் ஏன் உரையாடல்களும் கூட மதுரன், சன்சிகன் போன்ற அறியாமையின் மூடர்களுடன் இல்லை. இந்த வசையர்களுடன் உரையாடுவதில் அர்த்தமோ, பிரயோசனமோ இல்லை. ஒரு விடயத்தைக் கிரகிக்க இயலாதவர்களுடன் என்ன உரையாடல் செய்ய முடியும்? கொஞ்சம் வாசிப்பும் எழுத்துப் பரீட்சியமும் இருந்தாலே இவர்களிடம் வெளிப்படும் அறியாமையின் மூர்க்கத்தை அறிந்து கொள்ள முடியும். இவர்களால் சிறு கட்டுரையையோ அதன் மையக் கருத்தையோ வாசித்துக் கிரகித்து தங்கள் எண்ணங்களைத் தொகுத்து முன்வைக்க …

மூர்க்கரொடு முயல்வேனை

//  இன்றைய செய்திகளின் தொகுப்பு !  சோபாசக்திக்கு தன்னறம் விருது வழங்கியிருக்கிறது. ஒடுக்கப்படுபவர்களுக்காக ஒலிக்கும் குரல் சோபாவினதாம்.  நண்பர் கிரிசாந்தின் சமீபத்திய பேச்சுக்களில் இந்துத்துவ வாடை அடிப்பதாக அடிக்கடி நண்பர்கள் விசனப்பட்டுக்கொள்கிறார்கள்.  தன்னறம் சிவராஜ் ஒரு கடும் இந்துத்துவா என்பது இலக்கிய நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும். நண்பர் கிரிசாந்தின் புத்தக அச்சாக்க பணிகளை முழுமையாக செய்து கொடுத்தது தன்னறம். சிவராஜ் மற்றும் தன்னறம் ஜெயமோகனின் B team என்பது எழுத்தாள, …