நினைவுகளின் சிறகில் பறக்கும் ஒரு நாவல் ‘சிறகை’ – ப.பார்தீ

தசரதனுக்கு ஆயிரம் பெண்டாட்டி இரமன் செந்த மனைவியில் சந்தேகப்பட்டு தீக்குளிக்கவைத்து காட்டுக்கனுப்பி கொடுமைசெய்தவன் கடவுள் அட கடவுளுக்கு கடல் கடக்கதெரியாமல் குரங்கு உதவி இவற்றையெல்லாம் நம்பி கும்பிடும் உங்களுக்கு சம்பவங்கள் உண்மைகளாகவும் நியாயங்கள் தப்பிதலாகவும் வைத்திருக்கும் இலக்கிய உலகில் ஒரு இலக்கியப் படைப்பின் மதிப்பு அது சொல்லும் கதையில் மட்டும் இல்லை. அது வாசகரிடம் எழுப்பும் கேள்விகளிலும், சமூகத்தை தன்னைத் தானே மறுபரிசீலனை செய்யத் தூண்டும் ஆற்றலிலும் இருக்கிறது. அந்த …

ஷோபாசக்தி : அதிகாரத்தின் முன் உண்மையைப் பேசுதல்.

Prix Émile Guimet de littérature asiatique என்பது பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஆசிய இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கப்படும் முக்கியமான பிரெஞ்சு இலக்கிய விருதுகளில் ஒன்று. ஆசிய–பிரெஞ்சு கலாச்சார ஊடாட்டத்தை விரிவுபடுத்துவதும், சமகால ஆசிய இலக்கியங்களை பிரெஞ்சு வாசக உலகிற்கு அறிமுகப்படுத்துவதும் அதன் நோக்கம்.  அதன் 2026 ஆம் ஆண்டிற்கான நாவல் பிரிவு விருது ஷோபாசக்தியின் Salamalecs — தமிழில் : சலாம் அலைக்  — நாவலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பிற்குக் …

சிறகை : ஒரு வாசிப்பு அனுபவம்

வணக்கம் தர்மு, உங்கள் சமீபத்தைய “புனைவு மொழியெனும் கல்லுளியும் புனைவில் திரளும் நிலமும்” கட்டுரை படித்தேன் அதில் சமகால ஈழ இலக்கியத்தின் பல போதாமைகளைக் குறிப்பிட்டிருந்தீர்கள்.  உலக இலக்கிம்  எவ்வாறான  இடத்தில் இருக்கிறது.  ஈழ இலக்கியம் பிச்சை எடுப்பது போல “ஈழம்” எனும் பெயரை வைத்து உருட்டி இலக்கியம் எனும் கலையைக் கொச்சைப் படுத்துவது மிகவும் பரிதாபத்திற்குரிய விடயம் என நானும் நினைக்கின்றேன். கலைக்கு எந்த ஒரு அடைமொழியும் தேவை …

ஜனவரி 2026 கருப்புப்பிரதிகள் வெளியீடுகள்

ஆழப் புதைந்திருப்பது கல்விரல் (நாவல்) கிரிசாந் கருப்புப் பிரதிகள் 2026 “வரலாற்று முள்ளில் செருகப்பட்ட சிறு மொட்டே நீயெண்ணாக் காலத்திற்கும் உன் ஆன்மா துடிக்கப் போகின்றது பிதிர்களைக் கூவியழைத்து சாம்பலை கடலில் கரைத்த பிதாவே கூறும் சகோதரரே நீர் கூறும் அவள் தான் எடுத்த மண்ணை கடலில் ஏன் கரைத்தாள்?” அஸ்வகோஸ் * இந்த நாவலின் கருவை கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேல் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். பல கோணங்களில் பல்வேறு …

நீராழம் – நீலம்

என்னுடைய புதிய சிறுகதை நீராழம் நீலம் இதழில் வெளியாகியிருக்கிறது. /என்னிடம் இருந்தது ஏ.கே47. கூடவே சில 7மி.மி. ரவைகளும். அவையும் மிகச் சொற்பமாகவே எப்போதும் இருப்பில் இருக்கும். எண்ணி எண்ணிச் சுட வேண்டும். சுடும் ஒவ்வொரு குண்டின் நினைவுகளையும் குறித்துவைக்கும் குறிப்புக் கொப்பி வைத்திருந்தேன். ஒரு சூடு சுட்டதும் அந்தக் குண்டின் திசையை தாக்கிய இலக்கைக்  கவனமாகக் குறித்துக் கொள்வேன். கணக்குக் காட்ட அல்ல சொந்த நினைவுகளைப் பேண. ஓய்வான …

ஃபன்றி(Fandry) – சாதியில் உலர்ந்த நிலம்

(மராத்தியப்படம் ஃபன்றியை முன்வைத்து) சாதியத்தின் வேர்கள் மிக நுண்ணியமானவை. வாழ்வின் சிறு அசைவில் அது தன் வெறுப்பை, வன்மத்தை, பெருமிதத்தை, புறக்கணிப்பை தொடர்ந்து அழுந்தப் பதியவைத்தபடி இருக்கிறது. மனிதன் நவீனமாகிய பின்னர் சாதியமும் தனது புராதன புழுதிபடிந்த காட்டுமிராண்டி மரவுரியை  உதிர்த்துவிட்டு நவீன உடைக்குள் தன் கூரிய கறைபடிந்த பற்களை மறைத்திருக்கிறது. சொந்த இடம் எது? என்று விசாரிப்பதில் தொடங்கி இன்னாருக்கு சொந்தமா? என விசாரிப்பது வரை சாதியத்தின் எச்சங்கள் …