வசிகரனின் நோவிலும் வாழ்வு அறிமுகமும் வெளியீடும்.
ஆக்காட்டி வெளியீடான வசிகரனின் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டும் அறிமுகமும் நிகழ்வு 03.11.2024 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கலைத்தூது அழகியல் கல்லூரியில் நிகழ்ந்தது. அதன் ஒளிப்படங்கள்.
ஆக்காட்டி வெளியீடான வசிகரனின் கவிதைத் தொகுப்பின் வெளியீட்டும் அறிமுகமும் நிகழ்வு 03.11.2024 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் கலைத்தூது அழகியல் கல்லூரியில் நிகழ்ந்தது. அதன் ஒளிப்படங்கள்.
இளம் போராளி முள்ளந்தண்டு வரை ஊடுருவிப் பார்ப்பதாகத் தோன்றியதுமே என்னுள் சிறு துணுக்குறல் எழுந்து வியர்த்தது. பனிக்கட்டிக் குளிராக நிலைகுத்தி நரம்புகளில் ஊடுருவும் சில்லிட்ட பார்வை. என்னுள்ளே மெல்லிய நடுக்கம் ஊறினாலும் அதை மறைக்கக் குரலை லேசாக உயர்த்தினேன். எனக்கே என் குரல் அருவருப்பூட்டுவதாக இருந்தது. யாரோ இன்னொருவனின் கரகரத்த குரல் போல என்னிலிருந்து பிரிந்து காலடியில் நிழலாக நின்றிருக்கும் பிறிதொருவன் குரல் போல ஒலித்தது. போராளியின் பார்வையில் எந்த அசைவும் இல்லை. என் தடித்த குரல்
என்னுடைய புதிய சிறுகதை நீராழம் நீலம் இதழில் வெளியாகியிருக்கிறது. /என்னிடம் இருந்தது ஏ.கே47. கூடவே சில 7மி.மி. ரவைகளும். அவையும் மிகச் சொற்பமாகவே எப்போதும் இருப்பில் இருக்கும். எண்ணி எண்ணிச் சுட வேண்டும். சுடும் ஒவ்வொரு குண்டின் நினைவுகளையும் குறித்துவைக்கும் குறிப்புக் கொப்பி வைத்திருந்தேன். ஒரு சூடு சுட்டதும் அந்தக் குண்டின் திசையை தாக்கிய இலக்கைக் கவனமாகக் குறித்துக் கொள்வேன். கணக்குக் காட்ட அல்ல சொந்த நினைவுகளைப் பேண. ஓய்வான நேரங்களில் – அது அநேகமாகக் காவல்
01. ‘இமிழ்’ சிறுகதைத் தொகுப்பு மீது பல சந்தேகங்களும் ஊகங்களும் ‘விமர்சனங்கள்’ போல முன்வைக்கப்படுகின்றன. இமிழ் தொகுப்பைத் தற்குறித்தனம் என்று சிலர் மிகையாக மதிப்பிடுகின்றனர். சிலர் தங்களது ஊகங்கள், கற்பனைகள், தாழ்வுணர்வின் வடிகாலாக உரையாடுகிறார்கள். சிலர் ஷோபாசக்தி, தர்மு பிரசாத்துடைய இலக்கிய அதிகாரச் செயற்பாடாக அதாவது ‘பெரியண்ணர்’ மனநிலையாகவும், கதைத் தெரிவில் கடைப்பிடிக்கப்பட்ட உள்ளக இறுக்கத்தை / வடிகட்டலை சனநாயக மறுப்பாகவும் காண்கிறார்கள். தங்களுக்கு ஒவ்வாதவர்களின் கதைகளையும் சேகரித்துத் தொகுத்ததால் நாம் இருவரும் சேரம் போய்விட்டதாகவும், அங்கீகாரத்திற்குத்
11.எட்டு கிழவர்கள் : தமயந்தி தமயந்தி அவர்கள் யாழ். மாவட்டத்தின் அனலைதீவினை சேர்ந்தவர். அவரது கதைகளில் நெய்தல் நிலத்தின் சுவடுகளை நிறையவே காணலாம். தீவகமும் அதனோடு இணைந்த நெய்தல் நிலத்தினையும் தனது கதைகளில் புனைவாக்கம் செய்பவர். இதற்கு முன்னர் அவரின் சிறுகதை தொகுதியான “ஏழு கடற்கன்னிகளை” வாசித்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகவே இந்த கதையினையும் காண முடிகிறது. இலம்பங்குடாவும் அதனோடு இணைந்த வலம்புரித்தீவுமே இந்த கதை நிகழும் களங்கள். இலம்பங்குடா புனித மிக்கேல் தேவாலாயத்தின் அருட்துறவியான “சொக்கட்டான் சுவாமிகள்