சிறுகதை

விண்மீன்களின் இரவு

 01. இவன் அந்தத் தடிமனான கண்ணாடிக் கட்டிடத்தை விட்டு எழுந்து ஓடிவிட நினைத்தான். ஹீற்ரர் வெப்பம் பிடரி, காதுமடலின் பின்புறம் எங்கும் கொதித்தது. பல சோடிக்கண்கள் தன் பிடரியில் மொய்த்திருப்பதை நினைத்துப் பார்த்தான். தனது உடல் கேள்விகளால் துகிலுரிந்து நிர்வாணமாவதைப் பதட்டத்துடன் எதிர்கொண்டான். ஒவ்வொரு கேள்வியும் துப்பாக்கி ரவைகளை விட அதிக ஆழத்தில் அவனைத் துளைத்தன. உச்சமாக அவனுடைய அக்காவைப்பற்றிக் கேட்டது நீலப்படத்தின் சில துண்டுக் காட்சிகளை நினைப்பூட்டியது. சிப்பாயின் உள்ளாடையின் நிறத்திலிருந்து அக்காவின் முனகல்வரை விபரித்தான். […]

பித்தளைத் தீர்வுகள்

01. சமாதானத்தின் தூதுவர்கள் 22.02.2002. அதுவொரு வெள்ளிக்கிழமையின் உலர்ந்த மதியம். ஊரார் சமாதானத்தின் மகிழ்ச்சி மிதக்கும் கண்களுடன் தார் வீதி எங்கும்  அலைந்து திரிந்தபடி இருந்தனர். வீதியின் குறுக்காக இருந்த பழைய கல் மதகுக் கட்டில் அமர்ந்திருந்த சுடலையின் கண்கள் சமாதானத்தின் மகிழ்ச்சியை அச்சத்துடன் வேடிக்கை பார்த்தபடி இருந்தன. சாரத்தை ஒதுக்கி ஒரு பக்கமாகக் குந்தி இருந்த அவரது கண்களில் எஞ்சிய போதை மெல்லிய சிவப்புத் தணலாக ஒளிர்ந்தபடி இருந்தது. அவருடைய போதையில் கலங்கிய கண்களின் முன்னால்

நிலாவரை

தங்கராசு, உணவகம் வந்தபோது அது  பூட்டி இருந்தது. நேற்று மதியம் வரை சன சந்தடியில் அல்லாடிய உணவகம் இன்று எவ்விதச் சலனமும் இல்லாமல் இருந்தது. அதன் கண்ணாடிக் கதவில் புதிதாக வெள்ளைத் துண்டில் அறிவித்தல் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அதில் அடுத்த மாதம் கடை மீளத் திறக்கப்படும் என்ற அறிவித்தல் இருந்தது. உணவகத்தைப் பூட்டியதற்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக்கோரி இருந்தார்கள். தங்கராசுவிற்கு அது  பிடித்திருந்தது. அறிவித்தலை மெதுவாகத் தடவிப் பார்த்துத் தலையை ஆட்டினார். தன்னிடமும் மன்னிப்பு கேட்டிருக்கலாமோ என்று 

Scroll to Top