பிரபஞ்ச நூல்

‘பிரபஞ்ச நூல்’ ஷோபாசக்தியின் மிக நல்ல சிறுகதைகளுள் ஒன்று. இவை (மாதா, காயா, பிரபஞ்ச நூல்) இவரின் அடுத்த பட்டாம்பூச்சிக் காலத்தின் கதைகள். ஆரம்பத்தில் எழுதிய வட்டார வழக்கு கதைகளில் இருந்து நகர்ந்த நுட்பமும் பகடியும் கூடிய – அவரே சொல்லிக் கொள்வதுபோல் சற்றே நீளமாக்கப்பட்ட அரசியல் துண்டுப்பிரசுர – காலத்திலும் விபச்சாரியைப்* பற்றித் ‘தமிழ்’ என்று ஒரு கதை எழுதி இருக்கிறார். அது அரசியல் அழுத்தப் பின்னணியுடைய கதை. …

நாதனின் நேசமிகு விழிகள்.

காலச்சுவடு ஏப்ரல் 2019-ல் வெளியாகியிருந்த ‘நாதனின் நேசமிகு விழிகள்’ சிறுகதை ( ருவான் எம்.ஜயதுங்க  (சிங்களம்), தமிழில் / எம்.ரிஷான் செரீப்)இது ஒரு மேம்போக்கான கதைதான். பத்திரிகை செய்திகளின் மூலம் எழுதப்பட்ட ஒரு கதையாக கொள்ள இயலும். தினசரிபத்திரிக்கைகளில் வாசிக்கும் சிங்கள மக்களுக்குக்கான கதை. நாதனையும் தகப்பனையும் ஒப்பீடு செய்யும் இடம் ஒரு பொருளாதர அகதிக்கான இடமா? நாதன் அவ்வாறில்லையே…. மற்றபடி 83 கலவரம் காப்பற்றப்பட்டது… லண்டன் காசு, கன்னத்த …

வெள்ளாளச் சாதி உளவியல்

“தடம்: ஈழத் தமிழர்கள் மத்தியில் தமிழகத் தமிழர்களிடம் உள்ளதைப் போலவே சாதி என்பது மிக ஆழமாகப் பதிந்துள்ளது. அது புலம்பெயர்ந்தோர் மத்தியிலும்கூட உயிர்த்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அ.முத்துலிங்கம்: உங்களுக்கு தவறான செய்தி கிடைத்திருக்கிறது. ஈழத் தமிழர்கள் மத்தியில் சாதி வித்தியாசம் இருந்தது உண்மைதான். ஆனால் அது ஒருபோதும் வெறியாக மாறியது இல்லை. புலம் பெயர்ந்தபோது சாதியும் புலம் பெயர்ந்தது. ஆனால் ஒரு தலைமுறை கடந்த நிலையில் சாதி வித்தியாசம் …

காத்திருப்பு – தமிழ்நதி – கபாடபுரம்

காத்திருப்பு – தமிழ்நதி – கபாடபுரம் கபாடபுரத்தில் வெளிவந்த தமிழ்நதியின் சிறுகதை காத்திருப்பு வாசித்தேன். அதன் மொழி, சொல் முறை குறித்து கவனம் செலுத்தவில்லை எனிலும் அதன் உள்ளடக்கம் குறித்து உரையாட முடியும். நாம் எவ்வளவு தூரம் ஒடுங்கிய சிந்தனையும், புரிதலுமாக இந்த முப்பது வருட யுத்தத்தைக் கடந்து வந்திருக்கிறோம் என்பதைக் குறித்த உள்ளடக்கமது. இந்த முப்பதுவருடப் போர் அனுபவங்களிலிருந்து எதையும் அறிந்து கொள்ளவில்லையோ எனத் தோன்றுகின்றது. இன்று போர் …

கத்னா – மிஹாத்

கிளிட்டோரிஸ் சிதைப்பு விவகாரமானது இன்று தமிழகச் சூழலிலும் புதிய விவாதக் கதவுகளைத் திறந்திருக்கும் நிலையில் அதன் நிஜமான அக்கறைகளுக்குப் புறம்பாக இருக்கும் அதிகார நிகழ்ச்சி நிரலையும் கவனத்தில் கொள்ளாமல் விட்டு விட முடியாது.

இலங்கையில் தலித்தியம் பேசுதல்

  என்னுடைய அபிப்பிராயத்தில் நீங்கள் உங்கள் சமூக ஒழுங்கை மாற்றாவிட்டால் மிகக் குறைந்த அளவிலான முன்னேற்றத்தையே நீங்கள் அடைய முடியும் என்பதில் எந்த அய்யமும் இல்லை. தற்பாதுகாப்பிற்கோ இல்லை  தாக்குதலுக்கோ உங்கள் சமூகத்தை நீங்கள் ஒன்றுதிரட்டவே முடியாது.  சாதியின் அஸ்திவாரத்தின் மேல் நீங்கள் எதையுமே கட்டியெழுப்ப முடியாது. நீங்கள் ஒரு தேசத்தைக் கட்ட முடியாது. ஒரு அறிவியலைக் கட்ட முடியாது. சாதியின் அஸ்திவாரத்தின் மேல் நீங்கள் கட்டும் எதுவும் விரிசல் விடும்; …