பேரழிவின் பிறழ் சாட்சியம் -பார்த்தீனியம்

வரலாற்று நாவல்கள் அன்றாட நிகழ்வுகளை மிகைப்படுத்திய, புனைவுத்தன்மையுடன் தரும் புதினம் அல்ல. அவை உண்மையான வரலாறை மேலும் புரிந்து கொள்வதையே சாத்தியமாக்குகின்றன. உம்பர்தோ எகோ ‘தமிழ்நதியின் பார்த்தீனியம் :  பேரழிவின் மானுட சாட்சியம்’ யமுனா ராஜேந்திரன் ‘சற்றேறக் குறைய ஈழத்தின் எல்லா நாவல்களையும் வாசித்திருக்கிறேன். ஆனால் அதில் எழுதுபவரின் அரசியலையும் சேர்த்தேதான் உள்வாங்கிக் கொள்ள முடிந்திருக்கிறது. வாசகனைப் பொறுத்தமட்டில் சிலசமயம் அவனுக்கொவ்வாத அரசியல் அஜீரணத்தையும் ஏற்படுத்தக்கூடும். பார்த்தீனியத்தில் தமிழ்நதி வைப்பது …

நவீனமும் – எதிர் நவீனமும்

தெழிற்புரட்சியிலிருந்து உருவாகிவந்த நவீனம் மனிதவளர்ச்சியில் கட்டற்ற உடைப்பை நிகழ்த்தியிருக்கிறது. அதிலிருந்து நவீன மனிதனின் பிரச்சனைகளிலே சூழழியற் பிரச்சனைப்பாடுகளும் மிகமுக்கியமாகின்றன. வேட்டைச்சமூகம் தனது நாடோடி வாழ்வைத்துறந்து நிலையாக ஓரிடத்தில் தங்கியிருக்கும் விவசாய வாழ்வினுள் நுழைந்ததிலிருந்து, இயற்கையைத் துன்பம் வளைக்கத் தொடங்கியது. அபரிமிதமாக அகழப்படும் கனிமங்கள், தாதுப்பொருட்கள் மலட்டுத்தனமான நிலத்தை உருவாக்குவது ஒருபுறம் எனில் மறுபுறத்தில் நிலத்தடிநீர், பூமி வெப்பமடைதல், காடழிப்பு என எண்ணிலடங்கா சூழழியற்பிரச்சனைப்பாடுகளினால் நவீன மனிதன் பல புதிய இடர்களைச் …

என்னவாக இருந்தார் லெனின் சின்னத்தம்பி

ஜீவ முரளி எழுதிய லெனின் சின்னத்தம்பி நாவல் குறித்த கட்டுரை. புலம்பெயர்ந்த  இலங்கைத் தமிழர்களால்  எழுதப்பட்ட நாவற்பிரதிகளில் பல பொதுப்போக்குகளை நாம் அடையாளம் காணமுடியும். அதன் உரையாடற் புள்ளியாக எப்போதும் இலங்கையும், அங்கு நடைபெற்ற போருமே இருந்திருக்கிறது. இலங்கையின் அரசியற் பிரக்ஞையிலிருந்து விலகி மக்கள் பிரச்சினைப்பாடுகளைப் பேசிய நாவல்களென எதையும் தனித்து அடையாளம் காட்டமுடிவதில்லை. பெரும்பாலான புலம்பெயர் படைப்பாளிகள் இயக்கப் பின்புலம் உள்ளவர்கள். அதுவே அவர்களின் படைப்புகளின் அடியில் கரும்பரப்பாக …