ஷோபாசக்தி : அதிகாரத்தின் முன் உண்மையைப் பேசுதல்.
Prix Émile Guimet de littérature asiatique என்பது பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஆசிய இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கப்படும் முக்கியமான பிரெஞ்சு இலக்கிய விருதுகளில் ஒன்று. ஆசிய–பிரெஞ்சு கலாச்சார ஊடாட்டத்தை விரிவுபடுத்துவதும், சமகால ஆசிய இலக்கியங்களை பிரெஞ்சு வாசக உலகிற்கு அறிமுகப்படுத்துவதும் அதன் நோக்கம். அதன் 2026 ஆம் ஆண்டிற்கான நாவல் பிரிவு விருது ஷோபாசக்தியின் Salamalecs — தமிழில் : சலாம் அலைக் — நாவலின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பிற்குக் …
