இமிழ் : திருஞானசம்பந்தன் லலிதகோபன், பகுதி 1

பகுதி 1 (இந்த தொகுதியின் அனைத்து கதைகள் தொடர்பிலும் எழுத இருப்பதால் பகுதி பகுதிகளாக வெளிவரும் ) பொதுவாக தொகுதி என்ற சொல்லாடல் கவிதை அல்லது சிறுகதைகளையே குறிக்கும். இது குறித்த ஒரு எழுத்தாளரின் படைப்புக்களாயோ, அல்லது பல எழுத்தாளர்களின் புனைவுகள் சார்ந்ததாயோ இருக்கும். ஐம்பத்தோராவது இலக்கிய சந்திப்பின் நினைவாக வெளியிடப்படும் இந்த தொகுதி இலங்கை மற்றும் புலம்பெயர் எழுத்தாளர்களின் இருபத்தியேழு சிறுகதைகளின் தொகுப்பாக இருக்கிறது. சிறுகதை இலக்கியத்தினை பொறுத்து,காலத்துக்கு காலம் ஈழ இலக்கியத்தில் இவ்வாறான கூட்டு […]

இமிழ் : அரசியல் புலம்பெயரிகளால் பிற சமூகங்களுடன் ஏன் பண்பாட்டு ஊடாட்டம் செய்ய முடிவதில்லை?

சென்னையில் கருப்புப் பிரதிகள் ஏற்பாடு செய்த ‘இமிழ்’ சிறுகதைத் தொகுப்பு மீதான விமர்சனக் கூட்டத்தில் (05.05.2024) ஆய்வாளர் கண்ணன்.எம் அவர்களுடைய விமர்சனங்களைப் பார்த்தேன். கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்களுக்கு முன்னர் என்ன ‘விமர்சன’ முறையோடு இருந்தேனோ அதே நோக்கோடு அட்சரம் பிசகாமல் ஒரு தொகுப்பை விமர்சித்திருக்கிறார். காலப்பயணம் செய்து என்னையே – நான் பார்த்ததுபோல இருந்தது. என்னுடைய நல்லூழ் ஒரு சில  வருடங்களுக்குள்ளேயே என் தேடலின் பாற்பட்டு, குற்றம் கண்டுபிடிக்கும், படைப்புகளில் இல்லாததைத் தேடும் விமர்சன முறையிலிருந்து வெளிவந்து

நவீனம் கடந்த கவிதைகள் – ஒரு மறுப்பு

றியாஸ் குரானா வின் நவீனம்  கடந்த கவிதைகள் என்ற முன்வைப்பே மிகப் பரிதாபகரமானது.  நவீனம் எனப் பொதுவாகச் சொல்லப்படுவது கைத்தொழிற்புரட்சியின் பின்னரான காலகட்டம். அதன் பெரும் கொடையாக சனநாயகம், சமத்துவம், பகுத்தறிவு போன்றவற்றைச் சொல்வார்கள். பொதுக்கல்வி, பத்திரிகைகள் வழியாக அது பரவலாக்கப்பட்டது.  தமிழ் மனம் தன் பெரும் செய்யுள் மரபிலிருந்து நவீனகாலகட்டத்தினுள் நுழைந்த போது அல்லது நவீன காலகட்ட சிந்தனைகளை சந்தித்த போது, அது செய்யுளின் இறுக்கம் உதறி நவகவிதை /நவீனகவிதையைக் கைக்கொண்டது. அது ஒரு யுகமாற்றம்.

நோவிலும் வாழ்வு (கவிதைத் தொகுப்பு)

    நோவிலும் வாழ்வு வசிகரன் கவிதைகள் ஆக்காட்டி வெளியீடு 2024   கற்பாறைகளை மோதி மோதி ஒவ்வொரு அலையும் நுரைந்தழிவது போல் மொழியைக் கவிதைகள் இளக்குகின்றன. வசிகரன் கவிதைகளுக்குள் மோதும் அலைகளின் இடைவிடாத தீவிரம் கற்பாறையில் உப்பெனப் படிகிறது. அவரின் கவியுலகில் உருக்கொள்ளும் உடல்களும் நிலவுருக்களும் ஏற்கனவே ஈழத்தில் புழக்கத்தில் இருக்கும் கவியுலகுகளில் இருந்து பிறிதான ஒரு கரையை நோக்கியிருக்கிறது. அன்றாட வாழ்வின் இருளுலகுகளுக்குள் குத்தி ஏறி இறங்கும் சிறு படகென அவரால் நுழைய முடிகிறது.

செவ்வாத்தை

01. சாயம் உதிர்ந்து வெளிறிய துணியில் பொதிந்து வைத்திருந்த கல், சிவந்த தணல் துண்டு போல கனன்று எரிந்தது. நொடியில், துணியைப் பொசுக்கிவிடுவது போன்ற மூர்க்கமான தணல். துணியைப் பிரித்து கல்லை எங்கள் முன்னால் வைத்த வைரன், அமைதியாகவும் தீர்க்கமாகவும் அப்பாவின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார். அப்பா, ஒரு நொடி தயக்கத்தின் பின் அதைக் கையிலெடுத்து உள்ளங்கையில் வைத்து மேல் கீழாகத் தூக்கிப் பார்த்தார். அது, அவருடைய கையில் ஒட்டாமல் பாதரசத்துளி போல அங்கும் இங்குமாக அலைந்தது.

Scroll to Top