செம்மையாக்கம்

ஈழ இலக்கியச் சூழலில் இலக்கியம் தவிர்ந்த, ஒரு  புனைவின் அரசியல் உள்ளடக்கமும், புனைவில் துருத்தும் கருத்துகள் குறித்த உரையாடல்களுமே அதிகம் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாக இருக்கிறது. கூடவே ஈழத்தவர் ஒரு புனைவின் உண்மைத் தன்மை பற்றிய சந்தேகங்களையும், கேள்விகளையும் இடைவிடாது எழுப்பிக் கொண்டே இருப்பார்கள். அதுவே இலக்கியத்தை அளவிட மதிப்பிட இவர்களிடம் இருக்கும் ஒரே ஒரு அளவுகோல். அதுவே மூளைச் சோம்பலர்களின் இலகுவான வழிமுறையும் கூட. ஒரு புனைவில் …

துதிக்கை ஒற்றல்

கொடிறோஸ் – பதிப்புரை கொடிறோஸ் குறுநாவலை வடிவமைப்பு முடித்துப் பிழை திருத்தம் செய்வதற்கு தர்மினிக்கு அனுப்பியபோது அட்டையிலேயே “குறுநாவல்” என்று குறிப்பிட வேண்டுமா எனக் கேட்டார். அவரது சந்தேகத்திற்கும் காரணங்கள் உண்டு. தமிழில் சிறுகதைகள் அல்லாத புனைவுகள் நாவல் என்றே பிரசுரிக்கப்படுகின்றன. அதனால் பலருக்கும் நாவல், குறுநாவல், நெடுங்கதை, தொடர்கதைக்கான வடிவ பேதங்களில் ஓர்மை இருப்பதில்லை. பதிப்பாளர்கள் அவற்றைப் பொருட்படுத்துவதுமில்லை. அட்டையில் நாவல் என்று இருப்பதனால் இதை நாவல் எனச் …

கொடிறோஸ் (குறுநாவல்)

  கொடிறோஸ் (குறுநாவல்) ஆக்காட்டியின் மூன்றாவது வெளியீடு. யதார்தனின் மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம் சிறுகதைத் தொகுப்பு, வசிகரனின் நோவிலும் வாழ்வு கவிதைத் தொகுப்பைத் தொடர்ந்து கிரிசாந்தின் இக் குறுநாவல் வெளியாகிறது. முதல் இரண்டு வெளியீடுகளும் குறைவான வாசிப்பே ஈழத்தில் நிகழ்ந்திருக்கின்றன. இவற்றிற்கு என்றில்லை அநேகமான ஈழப் படைப்புகளின் நிலையும் அதுதான். காரணம் ஈழ வாசிப்பு பல முன்முடிவுகளுடன் சுமையுடன் இருக்கின்றது. அதனால் தன்னிச்சையான வாசிப்புக் குழுக்களோ அல்லது இலக்கிய …

டொமினிக் ஜீவா : தலித் எனும் தன்னுணர்வு

கடந்த எழுபது வருடங்களாக டொமினிக் ஜீவா இடையீடு செய்து கொண்டிருந்த இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு அவரது பங்களிப்பென்ன?  தன்னலம் கருதாத தனிமனித இயக்கத்திற்கு சமூகத்தில் ஒரு மதிப்பும் கரிசனமும் எப்போதும் உண்டு. பண்பாட்டுத் தளத்திலான இயக்கத்திற்கு மட்டுமே அந்தக் கரிசனத்திலிருந்து விதிவிலக்கு உண்டு. அவை பயனற்ற வெற்று வேலையாகவே பொதுச்சமூகத்தால் புரிந்துகொள்ளப்படும். அதிலும் பொருளியல் ஆதாயங்கள் ஏதும் கிடைக்காத கைக்காசைக் கரியாக்குகிற இயக்கியச் செயற்பாட்டை, சமூகம் எள்ளலுடன் எதிர்கொள்ளும். அந்த …

விண்மீன்களின் இரவு

 01. இவன் அந்தத் தடிமனான கண்ணாடிக் கட்டிடத்தை விட்டு எழுந்து ஓடிவிட நினைத்தான். ஹீற்ரர் வெப்பம் பிடரி, காதுமடலின் பின்புறம் எங்கும் கொதித்தது. பல சோடிக்கண்கள் தன் பிடரியில் மொய்த்திருப்பதை நினைத்துப் பார்த்தான். தனது உடல் கேள்விகளால் துகிலுரிந்து நிர்வாணமாவதைப் பதட்டத்துடன் எதிர்கொண்டான். ஒவ்வொரு கேள்வியும் துப்பாக்கி ரவைகளை விட அதிக ஆழத்தில் அவனைத் துளைத்தன. உச்சமாக அவனுடைய அக்காவைப்பற்றிக் கேட்டது நீலப்படத்தின் சில துண்டுக் காட்சிகளை நினைப்பூட்டியது. சிப்பாயின் …