சிகண்டி : சிகண்டி அம்பையாகுதல்.

01. பெருநகரின் இருளுலகைச் சித்தரிக்கும் படைப்புக்களில் வன்முறையும், குரூரமும் தூக்கலாக இருக்க வேண்டியதொரு நியதி உண்டு. அது இருளுலகைச் சித்தரிப்பதன் போதெழும் சிக்கல்களில் ஒன்று. அந்த இருளுலகு, வன்முறையின் மேல் மனிதக் கீழ்மையின் மேல் பரபரப்பானதாகவும் கூடவே சற்றே நாடகப் பாங்கானதாகவும் இருக்க வேண்டியதாகிறது. அப்படி இல்லாவிடில் இருள் வாழ்வின் குரூரம் படைப்பில் பிரதிபலிக்காதது போன்ற பிரமை எழும். கூடவே இருள் வாழ்க்கைக் களம்  வன்முறையையும் சாகசத்தையும் அவற்றின் விளிம்புகள் வரை நகர்த்தக் கூடியதாக இருக்கின்றது. அவை […]

திலீபன் : கரும்புலியும், அகிம்சைவாதியும்.

திலீபனின் நினைவு நாட்களில் காந்தியின் ‘ஒறிஜினல்’ அகிம்சை சந்தேகிக்கப்படும் சடங்கு நடக்கும். அதொரு வருட வழமை என்பதால் அதில் விசனப்பட ஏதும் இருப்பதில்லை. அப்படி ஏதும் நிகழாவிட்டால் மனம் பதட்டமடைமகிறது.சமூகம் முதிர்ந்துவிட்டதா? இல்லை கனிந்து விட்டதா? என்ற சாத்தியமற்ற சந்தேகங்கள் வலுக்கின்றன. அந்த உரையாடல்களின் ‘வெளியே’ இருந்தாலும் அவற்றைத் தொகுத்துக் கொள்ள முடியும். அவற்றின்  உள்ளடக்கம் அவை செல்லும் திசைக்குமான அச்சுகள் புலி விசுவாசிகளாலும், புலி எதிர்ப்பாளர்களாலும் பல நூற்றாண்டுகளின் முன்னரே வார்த்தெடுக்கப்பட்ட மாறாத திண்ணமுடையவை. வார்ப்புகளைச்

ஆனைக்கோடாலி (சிறுகதைகள்) : உட்சுருங்கும் புவியியல்

தர்மு பிரசாத்தினுடைய சிறுகதைகள் நிலம் பற்றிய அனுபவத்தினுடைய, அறிவினுடைய அளவு எல்லைகள் குறுக்கப்பட்ட காலத்திலிருந்து வருபவை. மேற்கண்டோருடைய எழுத்தின் நிகழ்காலத்துக்கு அண்மித்த எழுத்தே ஆயினும், ஒரு தலைமுறை கழிந்திருப்பதில் வேறு சில விவரணைகள் சாத்தியமாயிருக்கின்றன. இதுவரையான எழுத்துகளில் கிடைக்ககூடிய பெயரிடப்பட்ட இடங்கள் சார்ந்த இனவரைவியல் (Ethnographic), நிலவரைவியல் (Geographic)  சார்ந்த கரிசனைகளைத் தன்னுடைய எழுத்துக்கானதாகப் தர்மு பிரசாத் வரித்துக்கொள்ளவில்லை என்பது மிக முக்கியமான புள்ளியாய்ப் படுகிறது. அதே சமயம், எதார்த்தவாத பணிப்பிலிருந்து விடுபடவேண்டி சுயம் அல்லது அகம்

வால்

01. ‘டொப்’ என்ற சத்தம் கேட்டுக் கண் விழித்தபோது எங்கிருக்கிறேன் எனத் தெரியாத நல்ல உறக்கத்திலிருந்தேன். விழித்ததும் கூதல் காற்றே முகத்தில் அறைந்தது. கூடவே பிணம் எரியும் கருகல் வாசனையும் நாசியில் கரித்தது.  மூளை மடிப்புகள் விரிய உடல் அதிர்ந்து குளிர்ந்தது. காலை வெய்யிலில் கண்கள் கூசிச் சுருங்கின. எழுந்து அமர விருப்பமில்லாமல் இரு கைகளையும் கோர்த்துக் கால்களினுள் செருகி தோளைக் குறுக்கி சூட்டைத் தேக்கி உடலைக் கதகதப்பாக்கிப் படுத்திருந்தேன். குடலை அறுக்கும் வல்லூறுகளின் அடித் தொண்டை

டொமினிக் ஜீவா : தலித் எனும் தன்னுணர்வு

கடந்த எழுபது வருடங்களாக டொமினிக் ஜீவா இடையீடு செய்து கொண்டிருந்த இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கு அவரது பங்களிப்பென்ன?  தன்னலம் கருதாத தனிமனித இயக்கத்திற்கு சமூகத்தில் ஒரு மதிப்பும் கரிசனமும் எப்போதும் உண்டு. பண்பாட்டுத் தளத்திலான இயக்கத்திற்கு மட்டுமே அந்தக் கரிசனத்திலிருந்து விதிவிலக்கு உண்டு. அவை பயனற்ற வெற்று வேலையாகவே பொதுச்சமூகத்தால் புரிந்துகொள்ளப்படும். அதிலும் பொருளியல் ஆதாயங்கள் ஏதும் கிடைக்காத கைக்காசைக் கரியாக்குகிற இயக்கியச் செயற்பாட்டை, சமூகம் எள்ளலுடன் எதிர்கொள்ளும். அந்த எள்ளலுடன் கூடிய நிராகரிப்பைச் சந்திக்காத தமிழ்ப்

Scroll to Top