செம்மையாக்கம்

ஈழ இலக்கியச் சூழலில் இலக்கியம் தவிர்ந்த, ஒரு  புனைவின் அரசியல் உள்ளடக்கமும், புனைவில் துருத்தும் கருத்துகள் குறித்த உரையாடல்களுமே அதிகம் இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாக இருக்கிறது. கூடவே ஈழத்தவர் ஒரு புனைவின் உண்மைத் தன்மை பற்றிய சந்தேகங்களையும், கேள்விகளையும் இடைவிடாது எழுப்பிக் கொண்டே இருப்பார்கள். அதுவே இலக்கியத்தை அளவிட மதிப்பிட இவர்களிடம் இருக்கும் ஒரே ஒரு அளவுகோல். அதுவே மூளைச் சோம்பலர்களின் இலகுவான வழிமுறையும் கூட. ஒரு புனைவில் …

துதிக்கை ஒற்றல்

கொடிறோஸ் – பதிப்புரை கொடிறோஸ் குறுநாவலை வடிவமைப்பு முடித்துப் பிழை திருத்தம் செய்வதற்கு தர்மினிக்கு அனுப்பியபோது அட்டையிலேயே “குறுநாவல்” என்று குறிப்பிட வேண்டுமா எனக் கேட்டார். அவரது சந்தேகத்திற்கும் காரணங்கள் உண்டு. தமிழில் சிறுகதைகள் அல்லாத புனைவுகள் நாவல் என்றே பிரசுரிக்கப்படுகின்றன. அதனால் பலருக்கும் நாவல், குறுநாவல், நெடுங்கதை, தொடர்கதைக்கான வடிவ பேதங்களில் ஓர்மை இருப்பதில்லை. பதிப்பாளர்கள் அவற்றைப் பொருட்படுத்துவதுமில்லை. அட்டையில் நாவல் என்று இருப்பதனால் இதை நாவல் எனச் …

மூர்க்கரொடு முயல்வேனை

//  இன்றைய செய்திகளின் தொகுப்பு !  சோபாசக்திக்கு தன்னறம் விருது வழங்கியிருக்கிறது. ஒடுக்கப்படுபவர்களுக்காக ஒலிக்கும் குரல் சோபாவினதாம்.  நண்பர் கிரிசாந்தின் சமீபத்திய பேச்சுக்களில் இந்துத்துவ வாடை அடிப்பதாக அடிக்கடி நண்பர்கள் விசனப்பட்டுக்கொள்கிறார்கள்.  தன்னறம் சிவராஜ் ஒரு கடும் இந்துத்துவா என்பது இலக்கிய நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும். நண்பர் கிரிசாந்தின் புத்தக அச்சாக்க பணிகளை முழுமையாக செய்து கொடுத்தது தன்னறம். சிவராஜ் மற்றும் தன்னறம் ஜெயமோகனின் B team என்பது எழுத்தாள, …

நோவிலும் வாழ்வு உரைகள்

வசிகரனின் நோவிலும் வாழ்வு கவிதைத்தொகுப்பு 03.11.2024  யாழ்ப்பாணம் காலைத்தூது அழகியல் கல்லூரியில் வெளியீடு செய்யப்பட்டது. அதன் தலைமையுரையில் கருணாகரன் ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். பலரும் உணர்ந்து கொண்ட விடயம்தான் என்றாலும் திரும்பத் திரும்பச் சுட்ட வேண்டியிருக்கிறது. ஈழத்தில் இலக்கியக் கருத்துகள், விமர்சனங்கள், பார்வைகளை விரிவாக யாரும் முன்வைப்பதில்லை. வாசிக்கும் பலரும் கள்ள மெளனம் சாதிக்கிறார்கள் என்றும், அது கடக்கப்படவேண்டியதொரு நிலை என்றும் சுட்டியிருந்தார். உரையில்  பேஸ்புக்கிலாவது சிறுகுறிப்புகளாக வாசிப்பை முன்வைக்க …

இமிழ் : தொகுப்பும் தவிர்ப்பும்

01. ‘இமிழ்’ சிறுகதைத் தொகுப்பு மீது பல சந்தேகங்களும் ஊகங்களும் ‘விமர்சனங்கள்’ போல முன்வைக்கப்படுகின்றன.  இமிழ் தொகுப்பைத் தற்குறித்தனம் என்று சிலர்  மிகையாக மதிப்பிடுகின்றனர். சிலர் தங்களது ஊகங்கள், கற்பனைகள், தாழ்வுணர்வின் வடிகாலாக உரையாடுகிறார்கள். சிலர் ஷோபாசக்தி, தர்மு பிரசாத்துடைய இலக்கிய அதிகாரச் செயற்பாடாக அதாவது ‘பெரியண்ணர்’ மனநிலையாகவும், கதைத் தெரிவில் கடைப்பிடிக்கப்பட்ட உள்ளக இறுக்கத்தை / வடிகட்டலை சனநாயக மறுப்பாகவும் காண்கிறார்கள். தங்களுக்கு ஒவ்வாதவர்களின் கதைகளையும் சேகரித்துத் தொகுத்ததால் …

இமிழ் : திருஞானசம்பந்தன் லலிதகோபன் – 2

11.எட்டு கிழவர்கள் : தமயந்தி தமயந்தி அவர்கள் யாழ். மாவட்டத்தின் அனலைதீவினை சேர்ந்தவர். அவரது கதைகளில் நெய்தல் நிலத்தின் சுவடுகளை நிறையவே காணலாம். தீவகமும் அதனோடு இணைந்த நெய்தல் நிலத்தினையும் தனது கதைகளில் புனைவாக்கம் செய்பவர். இதற்கு முன்னர் அவரின் சிறுகதை தொகுதியான “ஏழு கடற்கன்னிகளை” வாசித்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகவே இந்த கதையினையும் காண முடிகிறது. இலம்பங்குடாவும் அதனோடு இணைந்த வலம்புரித்தீவுமே இந்த கதை நிகழும் களங்கள். இலம்பங்குடா புனித …